உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அம்மாவையும், அங்குள்ளவர் எல்லோரையும் நான் கேட்டதாகச் சொல்லு.' இத்தனை வார்த்தைகளையும் கூறுவதற்குடாமுக்கு இயற்கையில் வலிமையில்லை. ஆயினும் தன் உள் ளத்தில் இடைவிடாமல் தங்கியிருந்த ஜியார்ஜை அவன் கண்டுவிட்டதால், அந்த மகிழ்ச்சியால் அவ னுக்குத் தெம்பு உண்டாகியிருந்தது. ஆனால் அது நீடித்திருக்கவில்லை. அவன் மீண்டும் தளர்ச்சியடைந் தான். மூச்சு வேகமாயிற்று. அவன் அமைதி யோடு கடைசி முறையாகக் கண்களை மூடிவிட் டான். லெகிரி கொட்டடி அருகில் நின்று அங்கு நிகழ்ந் ததைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே ஜியார்ஜு-க்குச் சினம் பொங்கியெழுந்தது. அவன் எழுந்து சென்று, லெகிரி யைப் பார்த்து, 'உன்மீது விரைவிலே கொலை வழக்கு வரும் !" என்று உரத்த குரலில் கூறினன். வழக்குக்குச் சாட்சிகள் எவர்கள்? நீகிரோக் களின் சாட்சியம் நீதித்தலத்தில் செல்லாது' என்றான் லெகிரி, ஆம், அதுவும் உண்மைதான். அக்காலத்திய சட்டம் அப்படித்தான் இருந்தது என்பதை ஜியார்ஜ் உடனே உணர்ந்துகொண்டான். லெகிரி, செத்த நீகிரோவுக்கு ஏன் இவ்வளவு தடபுடல் ? என்று ஏளனம் செய்தான். மேற்கொண்டு ஜியார்ஜால் பொறுத்திருக்க முடியவில்லை. அவன் கண்கள் அனல் வீசிக்கொண் டிருந்தன. அவன் விர்ரென்று வேகமாய்ப் பாய்ந்து 'என்னடா சொன்னாய் ? யாரைச் சொன்னாய்?’ என்று

I 26

126