உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட அடிமைகள், தாங்கள் எத்தகைய இடத்திற்குச் செல்லுகிருேம் என்பதை ஓரளவு தெரிந்துகொண் டார்கள். வழியில் இடையிடையே லெகிரி எமிலினிடம் பேச்சுக் கொடுத்தான். ஒரு சமயம், கண்ணே, சீக் கிரம் வீடு வந்துவிடும் ' என்று சொன்னன். மற் ருெரு சமயம், நீ ஏன் காதுகளில் டோலக்கு எதுவும் அணிந்துகொள்ளவில்லை?” என்று பிரியமாகக் கேட் டான். அவன் தன்னை அடித்தாலும் தாங்கிக்கொள்ள லாம், ஆளுல் அவன் கொஞ்சிப் பேசுவதைத் தாங்க முடியவில்லையே என எமிலின் வருந்தினள். வீட்டுக் குப் போனபின், உனக்குக் கம்மல்களும் டோலக்கு களும் தருகிறேன்! உன்னே கல்ல முறையில் கடத்து கிறேன். ஆனல் நீயும் முறையாக கடந்துகொள்ள வேண்டும். கான் சொல்லுவதை யெல்லாம் கேட்க வேண்டும்!" என்றும் அவன் கடறினன். பருத்திக் காட்டினருகில் லெகிரியின் வீடு அமைக் திருந்தது. அது மிகப் பெரியதாக இருப்பினும், பாழடைந்திருப்பதாகத் தோன்றிற்று, முன் புறத்தி லும், பக்கங்களிலும் கட்டைகளும் குச்சிகளும் சிதறிக் கிடந்தன. எங்கும் குப்பையும் கடளமுமாக இருங் தது. வண்டி அந்த வீட்டு வாசலை நெருங்கியதும், வீட்டிலிருந்து நான்கு வேட்டை காய்கள் சீறிக் கொண்டு வெளியே பாய்ந்து வந்தன. அவைகளுக்குப் பின்னல் தடித்த உடல்களையுடைய இரண்டு அடிமை கள் ஓடிவந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டார்கள். லெகிரி கீழே இறங்கி காய்களைத் தட்டிக்கொடுத்தான். அடிமைகளே! இந்த காய்களைப் பார்த்துக்கொள்ளுங் கள்! இங்கிருந்து நீங்கள் தப்பியோட முயன்ருல்,

84 -

84