பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?—கல் தூண்
பிளந்து இறுவது அல்லால், பெரும் பாரம் தாங்கின்,
தளர்ந்து வளையுமோ தான்?6

நீர் அளவே ஆகுமாம்.நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம், நுண் அறிவு: மேலைத்
தவத்து அளவே ஆகுமாம், தான் பெற்ற செல்வம்;
குலத்து அளவே ஆகும், குணம்.7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே; தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்;—தொல் உலகில்
தல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு,
எல்லார்க்கும் பெய்யும், மழை.10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்,
விண்டு உமி போனால், முளையாதாம்;—கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது, அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.11

மடல் பெரிது, தாழை; மகிழ் இனிது கந்தம்;
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா;—கடல் பெரிது:
மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண் நீரும் ஆகிவிடும்.12

கவை ஆகி, கொம்பு ஆகி, காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல, நல்ல மரங்கள்; சவை நடுவே
நீட்டு ஓலை வாசியாநின்றான், குறிப்பு அறிய
மாட்டாதவன், நல் மரம்.13

கான மயில் ஆட, கண்டு இருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து, தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே,
கல்லாதான் கற்ற கவி.14