உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அறிஞர் அண்ணா

என் உயிர் பிரியும் நேரம் இது - நீ தர்ம தேவன் ராஜாராமன் தவசிகளை ரட்சித்தவன் - தவசிகளை இம்சித்த ராட்சதர்களைச் சம்ஹரித்த ஜெயராமன்! இந்த அக்ரமத்துக்குத் தக்க தண்டனை தர, உன்னால் முடியும் உன் கடமை அது! மகனை, மாபாவி கொன்று மாதா வயிறெரிந்து கூறுகிறேன், பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். ராமா! நீ நல்லவன். சகலகலா வல்லவன். என். மகனைக் கொன்ற மாபாவியை, மண்டலத்திலே, எங்கு இருப்பினும், தேடிக் கண்டுபிடித்து, அவனுடைய ஈவு இரக்கமற்ற நெஞ்சைக் கூறு கூறாக்கிக் காக்கை கழுகுக்கு விருந்திடு. வேண்டாம்! அவைகளின் குணமும் மேலும் கெட்டு விடும் - மண்ணில் புதைத்து விடு. இராமா! என்' கண்ணீர் என் மகனின் வெட்டுண்ட கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தம், இரண்டும், இதோ, உன் கரத்திலே. கலந்து குழைந்து இருக்கிறது! பழிக்குப் பழி அக்ரமக்காரனுக்குத் தக்க தண்டனை! இரக்கமற்றவனுக்கு ஏற்ற தண்டனை அளிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது என் மகன் தலை - உன் கையில் - நான், உன் காலடியில் (அவள் கீழே உயிரற்று வீழ்கிறாள். இதற்குள் பணியாட்கள் வந்து கூடுகின்றனர். கரைபட்ட இராமனின் கரத்தைக் கழுவ நீர் கொண்டு வந்து தருகின்றனர். கை கழுவிக் கொண்டே இரா : இன்னும் கொஞ்சம் ஜலம், கழுவக் கழுவ.. கரை போக காணோம். பட்டுத்துணி கொண்டு துடைத்தும் பயனில்லை. எடுத்துச் செல்லுங்கள். (தலையையும் தாயின் உடலையும் எடுத்துச் செல்கின்றனர். இராமன் அரண்மனை செல்கிறான்.]