பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கம் : அவசியமில்லை.. அறிஞர் அண்ணா நீதி : அது நான் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயம் அவசியமா, அல்லவா என்பது - சாட்சி இல்லை என்று மட்டும் நீர் கூறலாம். கம்: ஆமாம் நீதிதேவா சாட்சி இல்லை அதாவது.m நீதி : இலங்கேசன், பேசலாம். இரா : வழக்கின் முடிவு பற்றிய கவலையற்றே நான் இதிலே கலந்து கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிவிட்டேன். காரணம் நீதிதேவனிடம் மதிப்புக் குறைவு அல்ல. நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட, ஏதோ ஓர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக் கற்கள் அவருக்குத் தரப்பட்டவை? இவைகளின் துணை கொண்டு நீதிதேவன், நிறை பார்க்கிறார். நான். அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்கவில்லை. அந்தத் துலாக் கோலையே சந்தேகிக்கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன். எனக்குச் சாதகமான, தீர்ப்பு கிடைக்க வேண்டுமானால், நீதிதேவனின் உள்ளம் திருப்தியாவது மட்டும் போதாது அவர் - தம்மிடம் தரப்பட்டுள்ள துலாக் கோலையும், படிக்கற்களையும், தூக்கி எறிந்து விட்டு வழக்கின் சகல அம்சங்களையும் தாமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு நீதிதேவனுக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதாது - உள்ளத்தில் உரம் வேண்டும். [நீதிதேவன், தலையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கக் கண்டு கம்பர் கோபமாக எழுந்து] கம் இலங்காதிபதி, வழக்கு மன்றத்தையே அவமதிக்கிறான் அவமதிக்கிறார்