பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.64 அறிஞர் அண்ணா இரா[விசுவாமித்திரரைப் பார்த்து] நாடாண்ட மன்னனைக் காடு ஏகச் செய்தீர்! அரண்மனையிலே சேடியர் ஆயிரவர் பணிவிடை செய்ய, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த அரசியை அடிமை வேலை செய்ய வைத்தீர். மகன் பாம்பு தீண்டி இறந்தான். சுடலை காத்து நின்றான் கணவன்! செங்கோல் ஏந்திய அவன் கரத்திலே, தவசியாரே! பிணங்கள் சரியாக வெந்து, கருகினவா என்று கிளறிப்பார்க்கும் கோல் இருந்தது. பெற்ற மகன் பிணமாக எதிரே பொற்கொடி போன்ற மனைவி கதறிப் புரண்டிடும் காட்சி, கண் முன்னே, பிணம் சுட, சுடலைக் காசு கேட்கிறான்! தன் மகன் பிணமாக, தன் மனைவி மாரடித்து அழுகிறாள் - மாதவம் புரிந்தவரே! மகரிஷியே! அந்த மன்னன், சுடலைப் பணம் எங்கே என்று கேட்கிறான். ஐயோ மகனே! பாம்பு அண்டிக் கடித்தபோது அலறித் துடித்திட்டாயோ, பதறி விழுந்திட்டாயோ -சந்திரமதி புலம்பல் யாரடி கள்ளி! இங்கே பிணமது சுடவே வந்தாய், கேளடி மாதே சேதி, கொடுத்திடு சுடலைக்காசு! வெட்டியானாகிப் பேசுகிறான் வேந்தன். சுடலையில் இதைவிட, கல்லையும் உருக்க வேறு சோகக் காட்சி வேண்டுமா! கல்லுருவமல்ல, கலை பல தெரிந்தவரே! என்ன செய்தீர் இதைக் கண்டு?. இரக்கம், இரக்கம் என்று கூறி, என்னை இழிவு படுத்தும் எதுகை மோனை வணிகரே' மகன் பிணமானான்