உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறிஞர் அண்ணா பர: [கோபத்துடன்] போதும் அந்தப் பழங்கதை. விசு: [நீதிதேவனைப் பார்த்து சாந்தப் பாவனையில்] குற்றவாளிக் கூண்டிலே நிற்பவன், தன் முழுவாதத்தையும் கூற நாம் உரிமை தருவதே முறை- [பரசுராமனைப் பார்த்து] தடுக்க வேண்டாம். [இராவணனை நோக்கி] தாயைக் கொல்லத் தனயனை ஏவிய கூறும்,இலங்காதிபாபு மேலும் கூறு... தாயைக் கொல்ல தனயனை ஏவிய... இரா : தரும சொரூபி! இதோ இருக்கிறாரே [பரசுராமனைக் காட்டி] இவருடைய தகப்பனார் ஜமதக்னிதான்! அக்ரமக்காரத் தந்தையின் ஆற்றலுள்ள மகன் இவர்! மகரிஷியே! 'தாயின் தலையை வெட்டினீரே தகப்பனாரின் கட்டளையைக் கேட்டு; அப்போது இரக்கம் எந்த லோகத்துக்குக் குடி ஏறிற்று? இரக்கமற்ற நான், அரக்கன்! அறநெறி காப்பாளார் இவர்! பர : இரா : [கோபமாக ] துஷ்டத்தனமாகப் பேசும் உன் நாவை துண்டித்து விட எவ்வளவு நேரம் பிடிக்கும்! [எழுந்து நின்று) எவ்வளவு திமிர்! மமதை! [நீதிதேவனைப் பார்த்து] நீதிதேவா!' [பரசுராமனைக் கேலியாகப் பார்த்தபடி] ஆமாம், தவசியாரே! நாக்கைத் துண்டித்து விடும் இல்லையானால் பலப்பல விஷயம் அம்பலத்துக்கு வந்துவிடும், பாசம், பந்தம் இவைகளை அறுத்துக் கொள்ள முடியா விட்டாலும், தவசிரேஷ்டர்களே உமக்கு, நாக்கறுக்க, மூக்கறுக்க நன்றாகத் தெரியுமே செய்யும். [நீதிதேவன், எழுந்திருந்த பரசுராமரை, ஜாடை காட்டி உட்கார வைக்கிறார்.) விசு: [சமாதானப்படுத்தும் முறையில்] பரசுராமரே! கோபம் கொள்ளாதீர். இராவணன் உம்மைக் குறை கூறுவதாக அர்த்தமில்லை. இரக்கம் காட்டாது இருந்தவர்கள் நான்