பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் .79 என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தார் காரணம் எதுவோ கிடக்கட்டும் - நடந்தது படுகொலை = இரக்கம் இருந்ததா? துளி! பெண்கள் அழுதபோது? பால் வடியும் முகமுடைய சிசு கதறியபோது? - இருந்ததா -இரக்கம் காட்டப்பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினீரா? இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன் பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் இவர்களெல்லாம் தவசிகள் ரிஷிசிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்? என்னை விசாரிக்கக் கூடிடும் அறமன்றத்திலே இவர்கள் காப்பாளர்களாம். இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா? குற்றக் கூண்டில் இருக்க வேண்டியவர்கள்! நீதிதேவா! அறம் அன்பு ஏதுமறியாத இவர்கள், அறநெறி காப்பாளர்களா? [கோபத்துடன், கூண்டை விட்டு இறங்கிச் சென்று] [அறநெறி காப்பாளர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று] இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா? [ஆசனத்தைப் பிடித்தாட்ட அவர்கள் அவறுகிறார்கள்] (நீதிதேவன் மீண்டும் மயக்கமடைகிறார். கம்பர் பயந்து, நடுங்கி, அவசர அவசரமாக வெளியே செல்லப் பார்த்துக் கால் இடறிக் கீழே வீழ்கிறார். இராவணன் சென்று அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்துச் செல்கிறான்.] திராவிட நாடு 8-3-1947) [முற்றும்)