பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O நீதிநெறிவிளக்கம் க.க. அரசன் மூதறிவு ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்கின்று காக்கை வெளிதென்பா ரென் சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு. H 1. ஏதிலார்-அயலார், யாதும்-யாதெனினும், புகல-சொல் லக்கடவர் ; இறைமகன் - (அதனேக் கேட்டு முறை செய்ய வேண்டியவனகிய) அரசன், கோ.த - (அவர்கங் கூற்றுக்களிற் பொதிந்துள பொய்ம்மையாகிய) குற்றத்தினே, ஒரீஇ - களைந்து நீக்கி, கொள்கை - (உண்மைப் பொருளை) அறிந்து கோடலே, முதுக்குறைவு - பேரறிவாம் ; (என்னை 2) நேர்கின்று - (காக்கை யொன்றின்) எதிரிலே நின்று கொண்டு, காக்கை - (அக்) காக்கை, வெளிது - வெண்மை நிறமுடையது, என்பார் - என்.று சொல்வோர், என் - வேறு எதனத்தான், சொலார் - சொல்ல மாட்டார்கள் ? காய்க் கொலை - தாயைக் கொல்லுக.லும், சால் புடைத்து - நேர்மையுடைத்தே, என் பாரும் - என உறுதி கூற, முன் வருவோரும், உண்டு - உளர் (ஆதலின்). 2. நேர் கின்று காக்கை வெளிதென் பார் என் சொலார் ! காய்க் கொலை சால்புடைத்து என்பாரு முண்டு; (ஆதலால்), எகிலார் யாதும் புகல ; இறைமகன் கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு. 3. எதனையும் ஆராய்ந்து பார்த்து உண்மை யறிந்து முறை செய்வதே அரசர் கடம்ை. 4. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ” குறள். ' எவ்வுரை யெவர் சொற்ருலுங் தன்னறி வேற நோக்கி யவ்வுாை யுண்மை யன்மை யறிபவ சறிவுளோராம் கைவரு முலகிற்றத்தங் கருமத்துக் கேற்பச் சொல்வர் அவ்வகை யுனாக் காதை யறைகுவன் கேட்டி மன்ைே ” - மகாபாாதம்.

  • வெண் காக்கை விண்டா மாைமலர் செவ்வேழ மிவை

கொண்டாரிலரோ குவலயத்துப் - பண்டறவின் மன்பதை மாற்ற மறுவொரீஇக் கொள்ளலனக் தின்பான்மை கொண்டே யிறை.” 5. :குடிமக்கள் வழக்கிட்டுக்கொண்டு ஒருவர்மே லொருவர் அழுக்காறு முதலியவற்ரும் பொருங்காதனவுங் கூறுவாாகலால், அரச வைான் அவர் கூற்றுக்களை அப்படியே எடுத்துக் கொள் ளாமல் அவற்றிற் பொருந்துவனவே எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்து.' -இள.