பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நீதிநெறிவிளக்கம் சு க. வஞ்சித்துக்கொண்ட உடைமை இடைதெரிக் தச்சுறுத்து வஞ்சித் தெளியார் உடைமைகொண் டேமாப்பார் செல்வம்-மடகல்லார் பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர் அண்ணிடைபோற் றேய்ந்து விடும். 1 இடை - காலத்தின் வாய்ப்பு, தெரிந்து - அறிந்து, அச் சு அறுத்து - அச்சங்காட்டியும், வஞ்சித்து - ஏமாற்றியும், எளியார் - (தம்மில்) எளியவர்களுடைய, உடைமை - பொருள்களே, கொண்டு - கவர்ந்து, ஏமாப்பார் - இறுமாந்திருப்பவர்களத, செல்வம் - பொருள், மடநல்லார் - இளமகளிரின், பொம்மல் - பூரித்த, முலைபோல் |-- முலையினைப்போன் அறு, பருத்தி டிலும் - பருத் அதுக் காட்டிலுைம், மற்று அவர் - அம் மகளிரது, துண் ணிடை போல் - சிற்றிடைபோல், தேய்ந்துவிடும் - (அப்போதே) தேய் வுஅறும. 2. எளியார் உடைமை இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்துக் கொண்டு ஏமாப்பார் செல்வம், மடநல்லார் பொம்மன் முலேபோற் பருத் திடினும் அவர் நுண் ணிடைபோல் தேய்ந்து விரும். 3. அறத்தாற்றின் ஈட்டாத செல்வம் விரைந்து தேய்ந்து போம். 4. ' கள வின லாகிய வாக்க மளவிறங் தாவது போலக் கெடும்.” -குறள

  • நடுவின்றி நன்பொருள் வெஃகிம் குடிபொன்றிக்

குற்றமு மாங்கே தரும். ' -குறள். ' அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறளுக்கம் பேணு கழுக்கறுப் பான்.” --குறள். மடங்கிப் பசிப்பினும் மாண்டடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார்.' - பழமொழி. 5. எளியாரை வஞ்சித்துக் கவர்ந்த திரவியம், வளர்வதுபோலக் காணப்படினும், விாைவில் அழிந்து விடும்.” -அ கு. பெண்களின் பருத்த முலையையும் சிறுத்த இடையையும் முறையே செல்வ வளர்ச்சிக்கும், அறிவுக்கும் ஒப்பிட்டுக் காட்டிய ஆசிரியர் நுண் ணறிவு வியக்கத் தக்கது. இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து : ' இடை தெரிந்து-இடம் அறிந்து என்று பொருள் கொண்டார் கோ. இாாசகோபால பிள்ளை.