பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 க. கடவுள்வாழ்த்து 3

மாகக் கண்டுகொள்க. உவமைகள் உருவகமாக வந்தமையால் உவமேயக் கருத்துக்கள் உறுதியாயின. இளமை எய்திப் பொருள் தொகுத்து உடம்பை விடுதலால் அவைதம்மை அம்முறையே வைத் தார். இளமை உருத்திர்ண்டு அழகு கெழுமி இருப்பதுபோல் இருந்து சிறிது காலத்தில் மாறுதற்கும், செல்வம் மிகுந்துங் குறைந்தும் மறைந் தும் எழுந்தும் நீளத்தொடர்ந்தும் குறுகியமர்ந்தும் மாறுபடுதற்கும், நன்றாயிருக்கும். உடம்பு சட்டென்று இறத்தற்கும் முறையே குமிழி முதலியன உவமையாக வந்தன என்க.” -இள.

   குமிழி, திரைகள், நீரில் எழுத்து என்றமையால் நீர் என்று கொண்டது கடலையே குறிக்கும்; பிறவிக்கடலுக்குக் கடல் உவமை. பிறவியைக் கடலாகக் கொள்ளும் மரபை "பிறவிக்கடல் நீங்துவர்,” பிற வாழி நீந்தலரிது ' என்னும் குறட் பயிற்சியாலறிக.

நீரிற் குமிழி இளமை :

    நீர் - மங்கல முதன்மொழி.
    குமிழி - என்பது மொக்குள், கொப்புளம் எனப் பொருள்படும். இது முகுளம் என்னும் வடசொற் சிதைவென்பர் சிலர். குமிழி. உருண்டு கிாண்ட புடைப்பு. *

' குமிழி ' என்பது இளமை என்பதன் பெயர்ப்பயனிலை.

குமிழி, வினைமுதற்பொருளில் வந்த தொழிற்பெயர் ; குமிழ். பகுதி, இ - விகுதி. குமிழ்த்தல் - புடைத்தல் ”. -தி. சு. செ.

  • ஊரி, மூடி, அம்பலத்தாடி என்புழிப்போல, இவ்விடத்து இகா விகுதி வினைமுதற் பொருளைக் காட்டியது. குமிழுங் தொழிலை யுடையது ' குமிழி . குமிழ்தல் - புடைத்தல் ’’. # -சி.மு.

' குமிழ் - பகுதி, இ - வினைமுதற் பொருண்மை விகுதி. இப்பகுதி முகிழ் என்னும் முதனிலைத் தனி வினைப்பெயர், தசை, சதை ; நாளி கேளம், காளிகோம் ; மாக தம், மாதகம் என எழுத்து நிலைமாறி கின்ருற்போல கின்றசொல்’’. -கோ. இ.

இளமை-' இது சொன்னிலையால் மை யென்னும் பண்புப்பெயர் விகுதி பெற்றமைபற்றிப் பகுபதமாயினும், மை விகுதிக்குப் பகுஇப் பொருளின்றி வேறு பொருளில்லையாகலின் பொருனிலையாற் Lf c5F MT பத மென்னப்படும். இவ்வாய்பாட்டுப் பண்புகள் மை விகுதியின்றி யியங்கா.” - -சி. மு.

' குமிழி நாள்வெயிற் காலையிற் பளபளவென மின்னிக் காணப் பட்டுச் சிறிது கோத்தினுட் பொட்டென மாய்தல்போல, இளமையும் தொடக்கத்தில் மிகவும் அழகுடைத்தாகவும் இன்பமுடைத்தாகவுங் காணப்பட்டுச் சிறிது காலத்தினுள் கலனழிங் தொழியுமென்பார் நீரிற் குமிழி யிளமை யென்ருர். படுமழை மொக்குளிற் பல்காலுங் தோன்றிக்கெடும்’ என்ருர் நாலடியாரிலும்.’’ -வி. கோ. சூ.