பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 நீத்தார் வழிபாடு

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று Aiyi ranndu Thinggal la ay anggamellaam nondhu petru

பையலென்ற போதே பரிந்தெடுத்து -செய்ய இரு Paiyalendra põ dhe parin dheduththuch-seyya iru கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலே தந்தாளே Kaippurraththil ēnthik kanagamulai thanthaallai

எப்பிறப்பில் காண்பேன் இனி. Eppirrappil kaannpēn ini.

பத்துமாதம் சுமந்தாள் ; உடம்பெலாம் நொந்தது; குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை என்றனர்; அப்படிச் சொன்னதும் அன் போடு எடுத்துக் கொண்டாள். இரண்டு கைகளேயும் குழந்தை முதுகில் சேர்த்து ஏந்திள்ை; குழந்தைக்குப் பால் கொடுத்தாள்; இத்தகைய தாயை (இழந்தேன்) (அவளை) இனி எந்தப் பிறவியில் காண்பேன் ?

She carried me for ten months. With pain in all parts of the body she begot a child. Hearing that it was a male child she took it up with love, forced both her hands beneath the child, took it up fed it with her breast milk (Alas! such a mother, I 10st.) In which birth can I meet her again?

(60)

இந்த உடம்பு புலால் நாறுவது; புழுக்கூடு; உயிர் விட்டுப் போனதும் இதை ஒருவரும் விரும்பார்; உடனே அகற்றி விடவே நி&னப்பர்; சிலர் சுடுவர்; புதைப்பர்; கழுகுகளுக்கு இடுவர்; பெரு வெள்ளத்தில் விட்டிடுவர்; நாட்டுக்கு நாடு இதில் வேறுபாடு. சுட்டால் என்ன? புதைத்தால் என்ன? எல்லாம் ஒன்று தான். உடம்பு நிலையாதது என்று மட்டும் உண்மையாக-அழுத்தமாகஉணர வேண்டும். உணர்ந்தால்-சினம் இல்லே-வேறுபாடு இல்லை-உயர்வு தாழ்வு இல்லை-வலியார் எளியார் என்பது இல்லைகுற்றங்கள் நீங்கும்; குணங்கள் பெருகும்; நன்மை பெருகும்; தீமைகள் நீங்கும்; அச்சம் போகும்; அன்பு பெருகும்; உண்மை ஒங்கும்; எல்லோரும் இன்புறுக என்ற எண்ணம் தோன்றும்; வளரும்; சகோதரத்துவம் நிலைபெறும்.