பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தேவாரம்

THI RUGNA ANA SAM BAN DAR THEVAAR AM

(4)

இறைவன் எங்கும் இருப்பான். அவனுக்கு மக்கள் உருவம் கொடுத்து வணங்குவர். யார் எந்த வடிவில் நினைக்கிருர்களோ அந்த உருவில் வருவான். அவனுக்கு என்று ஒரு தனி உருவமும் இல்லை. அவனே ஆன க நினைத்தால் ஆணுக வருவான். பெண் ளுக நினைத்தால் பெண் ஆக வருவான். அவன் எங்கும் உளன். எவ் உருவிலும் உளன். எல்லாருடைய மனத்திலும் தங்கியிருப் பான். அவனே அன்போடு நினைக்கவேண்டும். அப்போது அவன் கட்டாயம் வருவான். -

திருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறி ஒர் துாவெண் மதிகுடிக் Thodu daiya seviyan vidaiéri ör thū venn madhi sūdi காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் Kaadudaiya sudalaip podipusi en ullllam kavar kallvan ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த Edudaiya malaran munainaali pannindhu ētha arull seydha பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே Peedudaiya bramaapuram mē viya pemmaan ivan andrrē

காதணி உள்ள செவி உடையவன்; எருதை வாகனம் ஆக உடையவன்; சுத்தம் ஆனதும் வெள்ளேயாக இருப்பதும் ஆன சந்திரனைச் சூடியவன்; சுடுகாட்டில் உள்ள சாம்பலே உடம்பில் பூசு பவன்-இவன் என் மனத்தைத் திருடிய திருடன். தாமரை மலரில் இருப்பவன் பிரமன்; அவன் முன் ஒரு காலத்தில் சிவனை வணங்கினன். துதித்தான். சிவன் பிரமனுக்கு அருள் செய்தான். பிரமன் பூசித்ததால் பிரமாபுரம் என்று பெயர் பெற்ற சீர்காழியில் இருக்கும் இறைவனே எனக்கு அருள் செய்தான், இதோ பார்!

He wears ear-rings in His ears. He wears pure white moon (over his head). He sunears sacred ash of the cremation ground. He is the thief who stole my heart. Brahma, seated on the lotus, once bowed and prayed. Hence the Lord blessed him, and Sirkaazhi came to be known thereafter by the name Brahmapuri. He is the Lord who is in the temple at Sirkaazhi. He blessed me.