பக்கம்:நூறாசிரியம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

216

வளையல்களனிந்த கை குலப்பிரிவைக் குலைத்தது நின் கழல் அணிந்த கால் அதன் தலையை மிதித்துத் துவைத்தது; உன் இரண்டு விழிகளும் அதன் இழிந்த கோட்பாட்டை எரித்துத் தீய்த்தன ; உன் பண்புடைய நெஞ்சம் அதனால் வரும் பழியைத் துடைத்தது செங்கால்களையுடைய நாரையைப்போல் அமைந்திருந்து உன் குறியாகிய கணவனை நீ பற்றிக் கொண்டனை, உன் துணிவு வியப்பானது; சான்றோர் துணையோடு உயர்ந்த வினைகளில் நாட்டம் கொண்டவனின், பருத்த தோள்களை நீ வாழ்வு இதுதான் என்று விடாமல் பற்றி மணந்து கொண்டனையே’ என்று வேறு குலத்தவன் ஒருவனை நயந்து காதலான் மணந்து மனையறம் புகுந்த தலைவியை வாழ்த்தியும் பாராட்டியும் உரைத்தாள் என்க. -

இது முல்லை என் தினையும் பாங்கி வாழ்த்தல் என்னுந் துறையுமாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/242&oldid=1209066" இலிருந்து மீள்விக்கப்பட்டது