பக்கம்:நூறாசிரியம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

243


31. நூற்றுக்கணக்கான அஞ்சல் பெட்டிகளும், பொதுத் தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.

32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

34. திருச்சி, அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.

35. சென்னை, ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீ வைத்தனர்.

36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்திற்கு ஒடவில்லை.

37. அரசினர் உந்துகள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.

38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.

39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.

40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீ வைக்கப்பெற்றது.

41. இந்திப் படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகளின் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.

42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.

43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.

44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.

45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள் தூளாக்கினர்.

46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர் வண்டி நிலையத்தைத் தாக்கினர்.

47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.

48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14முறை துமுக்கிச் சூடு நடத்தினர்.

49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன. அஞ்சலகப் பெயர்ப் பலகைகள் உடைக்கப்பட்டன.

50. 1965-இல் நடந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் கட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5பேர். தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/269&oldid=1221125" இலிருந்து மீள்விக்கப்பட்டது