பக்கம்:நூறாசிரியம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

275

60 இருந்தனை தமிழொடு


புனையினும் பூட்டு கழலறப் போகும்
மிசையினும் மேனி திரங்கலும் ஆகும்
ஒம்பினும் வன்மை காலத்து ஒழியும்
சாம்பினும் அழலுணச் சாம்பர் கழியும்
ஒக்கல் புறத்தழ விக்கல் மேலுற்று 5
முக்கலும் முனகலும் அடர்ந்துநா புலர்ந்து
திக்கலும் திணறலும் ஆகி உரைதப்பிக்
கக்கலும் கழிச்சலும் ஆலக் கண்ணவிந்து
நன்னடை நெற்றி நகர்ந்தும் கிடந்தும்
திண்மமும் மாறி நீர்மமும் கொள்ளாப் 10
புறங்கடை வாயிற் புகட்டிய தொழுக
வெள்விழி யேறி அறிவு வெளிறி
மெலமெல ஆவி கழிவுறு மேனாள்
இருந்து போகிய இடம்பார்த் தழுஉம்
பெருந்திரள் மாக்கள் பெறுவது மிலையெனும் 15
இழிதகைக் கஞ்சியோ மகனே
தழல்குளித் திருந்தனை தமிழொடு சிறந்தே!

பொழிப்பு:

பலவாறு (பூட்டியும் அணிந்தும் உடுத்தும் பூசியும்) புனைவு (அழகு) செய்து வந்தாலும், எலும்புகளால் பூட்டப் பெற்றுத் தசைகளால் பொதியப் பெற்றுத் தோலால் வேயப்பெற்ற இவ்வுடலானது, தன் கட்டமைப்புக் கழன்று இறுதியில் ஒன்றுமில்லாமற்போகும். (பலவாறு, பலவகையான பண்டங்களை) உண்டு காத்து வந்தாலும், இம் மேனியானது, காய்ந்து சுருங்கிப் போகும்; இதன் நலன்களைப் பலவாறு பேணிப்புரந்து நின்றாலும், இவ்வுடல் வலிமையானது, குறித்த காலத்தில் இல்லாது போய்விடும்; அவ்வாறு வலிமை ஒழிந்து, ஒடுங்கிப் போன உடலை எரி உண்டு தீர்த்துச் சாம்பலாகச் செய்யினும், அதுவும் ஒன்றுமில்லாமல் மண்ணில் கழிந்துபோகும் உறவினர்கள் புறமாக இருந்து அழவும், இறுதி விக்கலானது மேலேறி நின்று, மூச்சு முட்டவும், ஒலி முனகலும் மிகுந்து, நாவானது உலர்ந்து போய், உரை திக்கலும் திணறுவதும் ஆகி, பேச இயலாமல் உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/301&oldid=1209157" இலிருந்து மீள்விக்கப்பட்டது