பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - - சாதனங்களையும் சேகரித்துப் பாது காக் கு ம் நிலைய மாக இயங்குவதும் நூலகத்தின் இன்றியமையாத பணி களில் ஒன்ருகக் கருதப்படுகின்றது. திரைப்படங்கள், செய்திப் படங்கள், இசைத் தட்டுக்கள், மற்றும் பாட போதனைக்கு உதவுகின்ற வகையில் கண்டு பிடிக்கப்பட் டுள்ள புதிய சாதனங்கள் ஆகியவைகளும் எல்லாப் பள்ளி நூலகங்களிலும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் அமெரிக்கப் பள்ளி நூலகமானது நூல்களைச் சேக f.355 657 613; &sub st&vuilorra, syth (Materials Centre), போதனைச் சாதனங்களின் நிலையமாகவும் (Instructional Resource Centre) விளங்குகின்றது. எனவே அப்பள்ளி நூலகர், நூல் தேர்வு நிபுணராகவும் (Materials Specilist), போதனைச் சாதன ஆலோசகராகவும் (instrictional Resources Consultant) says, Liu@stoyri. மழலே மொழி பேசும் குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் இளஞ்சிருர்க்கும் பலவகைகளிலும் தொண்டு புரிவதற்கான செயல் திட்டங்கள் பள்ளி நூலகத்தின் பணி களில் சேர்க்கப்பட்டுள்ளன. படிக்கும் வேட்கை கொண்ட மாணவர்களுக்குப் படிப்பதிலும் காட்சிகளைக் கண்டும், சொல்வதைக் கேட்டும் அறிவு பெறுவதிலும் வழிகாட்டுவ தும், ஆய்வு உதவும் நூல்களைத் தரல் போன்ற உதவிகளைச் செய்வதும், மாணவர்கள் ஆராய்ச்சி நடத்த உதவுவதும், நூலகச் சாதனங்களே எவ்விதம் சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்வது என்பது பற்றி ஆலோசனைகள் கூறு வதும் பள்ளி நூலகத்தின் மற்றப் பணிகளாக அமைந் துள்ளன. இந்தப் பணிகள், கடமைகள் ஆகியவற்றை மனத் திற் கொண்டு நூலகத்தின் செயல் திட்டங்களைப் பள்ளி நூலகர் தயாரிக்கிருர். மேலும் அவர் நூலகத்தையும் நூால் களையும் கவர்ச்சிகரமாக வைத்திருப்பதிலும் தனிக் கவனம் செலுத்துகிருர். மாணவர்கள் அமர்ந்து படிக்கும் இடங்கள் நல்ல சுகாதார வசதியுடன், தாராளமான வெளிச்சம் வரும் வகையில் எழில் மிகு தோற்றத்துடன் திகழ்கின்றன.