பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*) 4 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் ஒருமுறை வெளிவரும் செய்திக் கடிதம் (AHIL News letter) ஒன்றையும் இதுவெளியிடுகிறது. 5. பொது நூலகச் சங்கம்: ஒவ்வொரு சமுதாயத்திலும் எல்லா வயதுப் பிரிவினருக்குமான பொது நூலகங்களின் பணிகளைப் பெருக்கி விரிவு படுத்துவதற்கான திட்டங்களை இப்பிரிவு தயாரிக்கிறது. 6. முதியோர் நூலகப் பணிப் பிரிவு: முதியோர்களுக் கான கல்வி, பொழுதுபோக்கு, பண்பாட்டு நூலக நட வடிக்கைகளே இப்பிரிவு விரிவாக்குகிறது. 7. அமெரிக்க நூலகப் பொறுப்பாளர் சங்கம்: இது நூலகப் பொறுப்பாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கு கிறது. நூலகத்திற்குப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்ட உதவுகிறது. நூலகப் பொறுப்பாளர்" (Library Trustee) என்ற இதழை வெளியிடுகிறது. 8. குழந்தை நூலகப் பணிப் பிரிவு: பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகள் முதல் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்கள்வரை எல்லாக் குழந்தைகளுக்குமான நூலகப் பணிகளைப் பெருக்க இப்பிரிவு உதவுவதுடன், அவர்களுக்கு உகந்த நூல்கள் பற்றி ஆலோசனைகளையும் கூறுகிறது. 9. நூலக கிருவாகப் பிரிவு : நூலக நிருவாகம் தொடர் பான ஒவ்வொரு அம்சம் குறித்தும் இப்பிரிவு ஆராய்ச்சிகள் நடத்தி, நிதி நிருவாகம், அலுவலர் தேர்வு, பயிற்சி, கட்டி டங்கள் அமைப்பு, கருவிகள், பொது உறவு, நூலக அமைப்பு ஆகியவை குறித்து ஆலோசனைகளைக் கூறு கிறது. 10. நூலகவியல் கல்விப் பிரிவு: நூலகவியல் கல்வியை ஆராய்ந்து, கால மாறுதலுக்கு ஏற்ப என்னென்ன மாறு தல்கள் செய்ய வேண்டுமென இப்பிரிவு முடிவு செய்கிறது. அலுவலர்களுக்கு அளிக்கும் நூலகவியல் கல்விக்கான பாடத் திட்டங்களை வகுக்கிறது.