பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நூலகக் கழகம் 97 திரட்டுவதற்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் மாநாடுகள், கருத்தரங்குகளைத் தலைமை நிலயம் நடத்துகிறது. நூலக அறிஞர்களும், வல்லுநர் களும் தொழில் முறையில் ஒன்றுகூடி, கருத்துக்களைப் பரி மாறிக் கொள்ளவும், புதிய நுட்பங்களைக் கண்டுபிடிக்கவும், ஒருவரோடொருவர் நெருங்கிய தொடர்பு கொள்ளவும் இந்த மாநாடுகளும் கருத்தரங்குகளும் உதவுகின்றன. பொதுமக்கள் தொடர்பு பொதுமக்களுடனும், நிறுவனங்களுடனும் அன்ருடம் தொடர்பு கொண்டு உதவிகள் புரிவதற்காகத் தலைமை |Aலயத்தில் பொது உறவு அலுவலகம் தனியாக இயங்கி வருகிறது. கழகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்பொழுது செய்தி அறிக்கைகளே இந்த அலுவலகம் வெளியிடுகிறது: பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலனுப்புகிறது: விரும்பும் உதவிகளைச் செய்கிறது. தலைமை நிலையத்தில் தனி நூலகம் ஒன்று உள்ளது. தமை நிலைய அலுவலர்களுக்கு இந்நூலகம் முக்கியமாகப் பயன்படுகிறது. நூலகவியல் தொடர்பாகவும் நூலகர் களின் தொழில் தொடர்பாகவும் உள்ள நூல்கள்தான் இந் நூலகத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. கழக உறுப்பினர்கள் கேட்டால், இந்நூல்கள் அவர்களுக்குக் கடனுகக் கொடுக்கப்படுகின்றன. இந்நூலகத்தில் இப் பொழுது 1800 நூல்களும் 400 பருவ வெளியீடுகள், துண்டு வெளியீடுகள் படங்கள், துண்சுருள்கள், ஒலிப்பதிவுகள், திரைப்படங்கள் முதலியனவும் உள்ளன. அமெரிக்க நூலகக்கழகத்தின் 13 பிரிவுகளையும் 10 இலாகாக்களையும் 32 குழுக்களையும் மேற்பார்வையிடும் பொறுப்புத் தலைமை நிலையத்தைச் சேர்ந்ததாகும். இப் பிரிவுகளின் செயல் முறைகளை ஒருங்கினத்து, அவை Wயாகச் செயல்படுவதற்கான திட்டங்களே வகுத்துக் நா -7