பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நூலகக் கழகம் 99 வெளிநாட்டு உதவித் திட்டம் அமெரிக்காவிலும், பிறநாடுகளிலும் உள்ள 60-க்கும் அதிகமான நூலகக் கழகங்கள் இந்தக் கழகத்தில் இணைந் இருக்கின்றன. 1943-இல் வாசிங்டனில் இக்கழகத்தின் n-on p-pop go Gyoral oth (International Relations Office) நிறுவப்பட்டது. வெளிநாடுகளில் அமெரிக்க நூல்களை வழங்கவும். அயல்நாடுகளில் அமெரிக்காவின் நூலக உதவித் திட்டங்களைச் செயலாக்கவும் இந்த அலுவல கத்தின் மூலம் இக்கழகம் வழிசெய்கிறது. அயல்நாட்டுச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்து, அந்த நாடுகளில் துலக வளர்ச்சி வேகம் பற்றியும், அங்கு நூலக முன்னேற் றத்திற்கு என்னென்ன உதவிகள் செய்யலாம் என்பது குறித்தும் கழகம் அறிந்து கெ ாள்கிறது. இக்கழகத்தின் டி.தவிபெறும் வெளிநாட்டு நிறுவனங்களில் டில் லிப் பல்கலைக் கழகத்தின் நூலகவியல் பள்ளிமுக்கியமானதாகும்.இரங்கூன் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், ஜப்பானி லுள்ள கியோ பல்கலைக்கழக நூலகவியல் பள்ளி. அங்காரா பல்கலைக்கழகத்தின் துலகக் கல்விக்கூடம், தேசியத் தைவான் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கும் அமெரிக் நூலகக் கழகம் உதவி புரிந்து வருகிறது. நமது நாட்டிலும் சென்னே நூலகக் கழகம், இந்திய நூலகக் கழகம் போன்ற நூலகக் கழகங்கள் பணியாற்றி வருகின்றன. அவைகள் அமெரிக்க நூலகக் கழகத்தைப் பின்பற்றி, தக்க முறையில் செயல்படுமாகில் நமது நாட்டு நூலகத் துறையிலும் உலகம் வியக்கத் தக்க நிலையில் பல புதுமைகள் நிகழுமன்ருே !