பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி பல்கலைக்கழக நூலகங்கள் I () o முதலில் மாணவர்களுக்கெனத் தனிப்பிரிவு தொடங்கப் பட்டது. அடுத்தபடியாக மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மாணவர் பிரிவு தனியாக அமைக்கப்பட்டது. இப்பிரிவில் 2,250 பேருக்கு இடவசதியுண்டு. 1960-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் மொ த்தம் 1450 கல் இாரி பல்கலைக்கழக நூலகங்களும், 581 இளங் கல்லூரி நூலகங்களும் இயங்கி வருகின்றன. கல்லூரி நூலகம் ஒன் யில் தலைமை நூலகர் நூற்பட்டியல் பிரிவு நூலகர் நூல் வழங்கு நூலகர் ஆய்வு உதவும் நூலகர் ஆகியோரும் அவர்களுக்கு அந்தந்தத் துறையில் பயிற்சி பெற்ற பல உதவியாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மாண வர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அளிக்கின் றனர். நூலக அலுவல்களும் நூல் சேகரிப்பும் பெரும் பாலும் நூலகக் கட்டிடத்தில் ஒருமுகமாக நடைபெற்று வந்தபோதிலும் சில குறிப்பிட்ட துறைகள் மட்டும், முக் கியமாக விஞ்ஞானத் துறைகள். தங்களுக்கு வேண்டிய நூல்களேத் தாங்களே சேகரித்துக் கொள்கின்றன. கல்வி நிறுவனங்களின் நூலகங்கள் பெருகப் பெருக மானிட வியல், சமூகவியல் அறிவியல் போன்று பாட வாரியாக நூல்கள் பகுக்கப்பட்டு. அவற்றில் பெரும்பாலானவற்றை அந்தந்தத் துறைகளுக்குரிய நூலகங்களில் வைக் கிரு.ர்கள். கோலரோடா, ஆரிகான். நெப்ராஸ்கா பல்கலைக்கழக நூலகங்கள், விரிவான பொருட்பிரிவுகளைக் கொண்டிருக் கின்றன. இலிய்ைஸ் பல்கலைக்கழகத்தில் 30 துறை நூலகங் களும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் 50 துறை நூலகங் களும் உள்ளன. சில பெரிய பல்கலைக்கழக நூலகங்களில் பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிரு.ர்கள். சுமார் 23 பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கு அதிகமான அலுவலர்கள் வேலை பார்க்கிருர்கள். பெரிய நூலகங்களில் தொழில் முறையில்லாத அலுவலர்கள், தொழில் முறை அ லுவலர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இருவருக்கு