பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு நூலகங்கள் I 23 இருக்கிறது. சில மாகாணங்களில் பல வரலாற்று நூலகங் கள் உண்டு. அந்தந்த வட்டார வரலாற்றில் ஆர்வமுடைய நூலகம், வரலாறு பற்றிய நூல்களையும் பல சான்றுகளையும் சேகரித்துத் பேணுவதில் தனி இன்பம் காண்கிறது. சேக ரிக்கும் நூல்கள் பற்றிய சிறு நூல்களை எழுதித் தயாரிப்ப தும் நூலகர்களின் பணிகளில் ஒன்ருகிறது. சில மாகாணங் அளில் ஆவணக் காப்புத் துறைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களின் கடந்த கால வரலாறு பற்றிய தகவல் கaா அறிவதற்கு இந்த ஆவணக்காப்புத்துறைகள் ஆராய்ச்சி யாளர்களுக்கு அரிய கருவூலகங்களாக அமைந்துள்ளன. அரிதான, விலை மதிப்பு மிக்க பதிவுச் சான்றுகளே யும் శివా ணங்களையும் மிகவும் கவனமாக பாதுகாத்தல் வேண்டும். டென்னசி மாகாண நூலகக்திலும், ஆவணக் காப்பிடத்தி லும் பழைய ஆவணங்களைப் பத்திரமாகப் பேணுவதற்கு ஒரு தனி ஆய்வுக்கூடமே உள்ளது. இங்கு ஆவணங்களே நன்ரு கச் சுத்தம் செய்து, இரசாயனப்படி கெடாமல் பக்கு வம் செய்து, பிளாஸ்டிக்கில் சுருட்டித் தனித்தனி உறை களி லிட்டு வைக்கிரு.ர்கள். இப்பணிகளுக்காக இங்கு துண் சுருள் கருவிகள், உருப்பெருக்கி எந்திரங்கள், புகைப்படப் படி எடுக்கும் சாதனங்கள், முதலியன உள்ளன. அமெரிக்காவின் பல்வேறு குடியரசுத் தலைவர்களின் ஆட்சிக்காலம் பற்றிய வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப் பதற்காக அண்மை ஆண்டுகளில் பல நூலகங்கள் நிறுவப் பட்டு வருகின்றன. அபிலின் (Abilene), கன்சாஸ் (Kansas) ஹைட் பார்க் (Hyde Park), நியுயார்க் ஆகிய நகரங்களி தும் கலிபோர்னியா மாகாணத்தில் பாலோ ஆல்டோ ('al Alto) விலுள்ள ஸ்டாண்ட் போர்டு பல்கலைக் கழகத் திலும் இத்தகைய நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந் நூலகங்கள் அனைத்தும் தொழில் முறை நூலகர்களால் நிருவ விக்கப்படுகின்றன. பெரும்பாலான வரலாற்று நூல கங்களில் மரபியல் (Genealogical) நூல்கள் இடம் பெற். துள்ளன. சில சந்தா நூலகங்கள், குறிப்பிட்ட அளவு சந்