பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நூலக நாட்டில் துாற்றிருபது நாட்கள் மாபெரும் பொது நூலகமாகத் திகழ வேண்டும் என நகர வாசிகளும் மற்றவர்களும் எதிர்பார்ப்பதில் வியப்பில்லை. அவர்கள் நம்பிக்கை வீண்போகாத வகையில், அமெரிக்கா விலேயே ஈடு இணையற்ற உன்னதமானதொரு நிறுவன மாக நியூயார்க் பொது நூலகம் அமைந்திருக்கிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரர். கறுப்பர்-வெள்ளையர், ஆளும் கட்சி.எதிர்க்கட்சி என்ற பேதங்கள் இன்றி எல்லா வயதி னர்க்கும், எல்லா மொழியினர்க்கும் முழு அளவில் பயன் படும் தலைசிறந்த சமரச நிறுவனமாக இந்நூலகம் இயங்கு கிறது. இன்னொரு சிறப்பான அம்சம் என்னவென்ருல், இந்நூலகத்தின் பராமரிப்பில் நகராட்சி மன்றமும் தனிப் பட்டவர்களும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பது ஆகும். மத்திய நூலகத்திற்குத் தேவைப்படும் ஆராய்ச்சி நூல்கள் வாங்குவதற்கு 80 சதவிகிதம் தனியார் நிதி உதவுகிறது. மீதத் தொகையை நகராட்சியினர் வழங்கு கின்றனர். கிளே நூலகங்களின் பராமரிப்புக்கும், வளர்ச் சிக்கும் தேவையான நிதியை நக்ராட்சி மன்றமும், மாநில அரசாங்கமும் அளிக்கின்றன. மத்திய நூலகத்தில் ஏறத்தாழ ஒரு கோடி நூல்கள் உள்ளன. இந்நூல்களைப் பற்றிய நூலக நூற்பட்டியல் அட்டைகளில் (Catalog Cardi) படிப்பாளர்களுக்குத் தேவையான எல்லா விவரங்களும் அடங்கியுள்ளன. அவற்றின் உதவி கொண்டு நூல்களை எளிதில் கண்டெடுக்க முடிகிறது. எந்த நூலேயாவது தேடி எடுக்க ஒருவருக்கு இயலாமல் போகுமாஞல், அவர் தாம் விரும்பும் நூலின் பெயரையும் மற்ற விவரத்தையும் ஒரு காகிதச் சீட்டில் எழுதி, நூல் வழங்கும் அலுவலரிடம் கொடுக்கிருர். அவர் அந்த நூல் எந்தப் பிரிவில் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்தச் சீட்டை ஒரு குழாயின் மூலம் குறிப்பிட்ட அந்தப் பிரிவுக்கு அனுப்புகிரு.ர். சில நிமிட நேரத்தில் நூல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படுகிறது.