பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 149 மாகத் தனது இறுதிநாள் வரையிலும் நூலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நோய்வாய்ப்படாத நாட்களிலும், நாள்தோறும் ஒருதடவையாவது நூலகத்திற்கு வர அவர் தவறியதில்லை. 1896 செப்டம்பர் 1. பில் காலமாகும் வரை அவர் அறப்பணிக் குழுவின் தலை _ராக இருந்தார். கார்னிகி உதவி பிராட் நூலகத் திறப்பு விழா நடந்த ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் புகழ்பெற்ற எஃகுத் தொழி வணிபரும், நூலக இயக்கப் புரவலர்களில் ஒருவருமான ஆண்ட்ரூ கார்னிகி (Andrew Carnegie) பிராட்டின் அழைப் - பேரில் புதிய நூலகத்தைப் பார்ப்பதற்கு வருகை புரிந்தார். அப்போது இருபெரும் வள்ளல்களும், அமெரிக்கப் பொது நூலகத்தின் எதிர்காலம் பற்றி விவாதித்தார் ள்ை. பிராட்டின் பணி கார்னி கியைப் பெரிதும் கவர்ந்தது. அமெரிக்காவின் நூலக இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்னிகி ஈடுபடுவதற்கும், நூலகங்களுக்காகப் பெருந்தொகைகளை வழங்குவதற்கும் இந்தச் சந்திப்புத் தான் துண்டுகோலாக இருந்தது. பிற்காலத்தில், நூலகங் _றக்குத் தாம் அளித்த உதவிகள் பற்றிக் குறிப்பிடுகையில், இந்த வகையில் ஈனக் பிராட்தான் எனக்கு வழிகாட்டி' -ான் ற கார்னிகி கூறினார். பிராட்-கார்னிகி சந்திப்பு நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1906-இல் ஈனுக் பிராட் இலவச நூலகத்திற்குக் மாரி ைகி 5,00,000 டாலர் நன்கொடை வழங்கினர். நூலகம் மற்றொரு நகரத்தில் மேலும் பல கிளைகள் நிறுவுவதற்கு மனைகள் வாங்க நிதி வழங்கினர். கட்டிடங்கள் கட்ட ஆகும் செலவில் 10 சதவிகிதத்தை அவரே ஏற்றுக் கொண்டார். நூலகத்தை நிருவகிப்பதற்கு ஆண்டுதோறும் தேவைப்படும் செலவுத் தொகையையும் கொடுத்தார். இவரது நன்கொடைகள் மூலம் 15 நூலகங்கள் நிறுவபட்டது.