பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 52 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மத்திய நூலகத்தின் ஒருபகுதி, ஆரம்பத்தில் மல்பெரி வீதியில் கட்டப்பட்ட கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. மற்றப் பகுதிகள் இடவசதிக் குறைவால், வேறு வீதியிலி ருந்த 3 வீடுகளில் இருந்தன. மத்திய நூலகத்திற்கு இணைப்புக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதைவிட, புதிய மத்திய நூலகக் கட்டிடம் ஒன்றையே கட்டிவிடலாமென வீலர் கருதினர். 1927-இல் இதற்கான திட்டம் ஒன்றை அறப்பணிக் குழுவின் ஒப்புதலுடன், நகராட்சித் தலைவ ருக்கு அனுப்பிஞர். இத்திட்டத்தை நகராட்சி மன்றம் ஏற்றுக்கொண்டு, காதட்ரல் வீதியில் 400 பகுதிகள் கொண்ட புதிய மத்திய நூலகக் கட்டிடத்தைக் கட்ட மனே ஒதுக்கியதுடன், கட்டுமானத்திற்கென 30,00,000 டாலரும் ஒதுக்கியது. புதிய கட்டிடத்திற்கான திட்டத்தை வகுக்கவும், வடிவமைப்பைத் தயாரிக்கவும் ஐந்தாண்டுகள் பிடித்தன. இறுதியில், 1930 டிசம்பரில் ஒதுக்கிய மனையிலிருந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது 1933 சனவரியில் புதிய மத்திய நூலகக் கட்டிடம் திறக்கப்பட்டது. சீர்திருத்தம் புதிய கட்டிடத்தில் மத்திய நூலகம் அமைந்ததும். நூல்களின் அமைப்பிலும், நூல்களை வரிசைப்படுத்தி அடுக்குவதிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஒரே பொருள் தொடர்பான வழங்கு நூல்கள், ஆய்வுஉதவி நூல்கள், பருவ வெளியீடுகள், பதிவேடுகள், துண்டு வெளி யீடுகள் அனைத்தும் ஒரே பிரிவில் இடம் பெற்றன. இவை களைத் தேடி எடுப்பதில் வாசகர்களுக்கு உதவ உதவியாளர் கள் நியமிக்கப்பட்டார்கள். இப்பிரிவின் சில பகுதிகளில் வாசகர்களே நேரில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். -£L gy Qurr Gsir LM flsyssir (Subject Departments) sr sðL டுத்தப்பட்டன. கதைகள், மற்றும் கற்பனை நூல்களுக்