பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I 71. மற்றவற்றை அந்நூலகத் கிற்கு அன்பளிப்பாக வழங்கி விட்டார் ஜெப்பர்ஸன். இந்த நூல்களை அடித்தளமாகக் கொண்டுதான், காங்கிரசு நூலகத்தின் இன்றைய மாபெரும் சேகரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது எனலாம். 1851-ஆம் ஆண்டு டிசம்பர் 21-இல் வாசிங்டனில் ஏற் பட்ட மற் ருெரு பெருந் தீவிபத்தில் காங்கிரசு நூலகத்தி லிருந்த நூல் சளில் பாதிக்குமேல் தீக்கிரையாகிவிட்டன. எனினும், இந்நூல்கள் மீண்டும் புதிதாக வாங்கிச் சேர்க் கப்பட்டன. துரித வளர்ச்சி 1815-க்கும் 1897-க்கு மிடைப்பட்ட ஆண்டுகளில் இந் நூலகம் துரிதமாக வளர்ச்சியடைந்தது. நூல்களின் எண் ணிைக்கை விரைவாகப் பெருகியது. 1840. லிருந்து வெளி நாட்டு அரசாங்கச் சான்றுகள் சேமிப்பு நிலையமாகவும், நூல் உரிமைப் பதிவு (Copyright) நிலையமாகவும், 1866. லிருந்து ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் (Smithsonian Institution) நூலகச் சேமிப்பு நிலையமாகவும் இந்த நூலகம் மாறியது. இதனுல் இந்நூலகம் மேலும் வலுவடைய வழி ஏற்பட்டது. 1867 இல் போர்ஸ் (Force) என்பவர் சேகரித் திருந்த அமெரிக்கக் கலைக்களஞ்சியத் தொகுதிகளும், 1882-இல் பெஞ்சமின் பிராங்களின் சேகரித்திருந்த நூல் களும், அமெரிக்கப் புரட்சிப் பற்றி ரோச்சம்பா (Racham. beau) சேகரித்து வைத்திருந்த நூல்களும் (1883) இந்நூல கத்திற் கென வாங்கப்பட்டன. குடியரசுத் தலவாகள் வாசிங்டன் (1834), மாடிசன் (1837), ஜெப்பர்ஸன் (1848), மன்ரோ (1849) ஆகியோரும் மற்றும் அலெக் சாண்டர் ஹாமில்டன் (1818), பெஞ்சமின் பிராங்களின் (1882) முதலியோரும் சேகரித்து வைத்திருந்த நூல்களையும் கடிதங்களையும் வாங்குவதற்கு அமெரிக்கப் பாராளுமன்றம் அங்வப்போது நிதி ஒதுக்கீடு செய்தது. இவையனைத்தும் 1000. இல் இந்நூலகத்தில் இடம் பெற்றன. பல பெரியவர் வள் இந்நூலகத்திற்கு ஏராளமான நூல்களை நன்கொடை