பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & O நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்

  • -** sam&sor (Reference Collections) e.gth. Lim & விவரத் தொகுதிகளும் (Bibliographies) இதில் அடங்கும். இந்த நூல்கள், எளிதில் கிடைக்கும் வண்ணம் வசதியான இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியப் படிப் பறையில் சுமார் 25,000 ஆய்வு உதவி நூல்கள் உள்ளன. தாமஸ் ஜெப்பர்சன் படிப்பறையில் 9,000 ஆய்வு உதவி நூல்களிருக்கின்றன.

நுண்சுருள்-நுண் அச்சு இந் நூலகத்தின் நுண்சுருள் படிப்பறை (Microfilm Reading Room) தனியாக இருக்கிறது. இங்கு நுண் சுருள் களே வாசகர்கள் படிக்கலாம். இதற்கான எந்திர சாதனங் கள் இவ்வறையில் உள்ளன. நுண் அச்சுக்களைப் (Micro. print) படிப்பதற்கும் இந்த அறையிலேயே தனியாக எந்திர சாதனங்கள் இருக்கின்றன. சில தனித் தேவைகளைக் கருதி, நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அலமாரிகளுக்கே சென்று நூல்களைப் படிக்கவும், குறிப்புகள் எடுக்கவும் சில வாசகர்கள் விரும்ப லாம். இவர்கள். இதற்கான தனிக் கோரிக்கைச் சீட்டை எழுதிக் கொடுத்து அனுமதி பெறலாம். ஆராய்ச்சிகள் நடத்துவோருக்கு உதவுவதற்காக இந் நூலகத்தில் தனி இடங்களும், நூல் அலமாரிகளும் ஒதுக் கப்பட்டிருக்கின்றன. உரிய அனுமதிபெற்று இங்கு ஆராய்ச்சிகள் நடத்தலாம். சட்ட நூலகம் சட்ட நூலகத்தின் (Law Library) படிப்பறை தலை மைக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள ளது. சட்டங்கள். சட்ட நுட்பங்கள், சட்ட விளக்கங்கள் பற்றிய 11 இலட்சம் நூல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. பண்டைக்கால, இக்காலச் சட்ட முறைகள் பற்றி பல்லாயிரம் நூல்களை இங்கு காணலாம். இங்குள்ள