பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I By நீடிக்கவில்லை. 1952-இல் ஆயுதப் படையினர் மருத்துவ 157°4tb" (Armed Forces Medical Library) grow to Quiu ரிடப்பட்டது. காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜான். எப். கென்னடி அமெரிக்கப் பாராளுமன்ற மேலவை உறுப் பினராகப் (Senator) பணியாற்றியபோது 1956-இல் அவரும் லிஸ்டர் ஹில் (Lister Hill) என்பவரும் சேர்ந்து கொண்டு வந்து நிறைவேற்றிய ஒரு சட்டத்தின்படி, இந் நூலகம் பொதுச் சுகாதாரத் துறையில் (Public Health Service) சுதந்திரமான ஆட்சியின் கீழ் வந்தது. அதோடு நூலகத் தின் பெயரும் "நாட்டுத் தலைமை மருத்துவ நூல *lb (National Library of Medicine) sr sor terr bsoli Lul - டது. 1962-இல் மேரிலாந்து (Maryland) மாநிலத்தில் பெதஸ்டா (Bethesda) நகரில் விஸ்கான்சின் பகுதியில் (Wisconsin Avenue) 3), Gun & Quiño anotb ol to 1-3 திற்கு இந்நூலகம் மாற்றப்பட்டது. 12 இலட்சம் நூல்கள் இந்நூலகத்தில் இப்பொழுது எழுபதுக்கும் அதிகமான மொழிகளில் ஏறத்தாழ 12 இலட்சம் நூல்கள் உள்ளன. இவற்றில் மருத்துவ விஞ்ஞானத் தொடர்பான நூல்கள், பத்திரிகைகள். ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புகள், சிறு வெளியீடுகள், நுண் சுருள்கள் (Microfilms) ஆகியவை அடங்கியிருக்கின்றன. இந்தத் துறையில் உலகிலேயே மிகப் பெரிய ஆராய்ச்சி நூலகமாக இன்று இது திகழ் கிறது. குறிப்பிட்ட பொருள் பற்றிய 3 இலட்சம் கட்டுரை கள், 2,86,000 பத்திரிகைத் தொகுப்புகள் 2,85,000 ஆராய்ச்சிக் குறிப்புகள், 167,000 துண்டு வெளியீடுகள், 8. 300 நுண்சுருள் தொகுதிகள், 59,000 ஒவியங்கள், விளக் கப்படங்கள் ஆகியவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன. அமார் 15 000 பருவ வெளியீடுகள் இப்போது இந்நூலகத் நிற்கு வருகின்றன. --