பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நூலக நாட்டில் துாற்றிருபது நாட்கன் அமைப்பு முறை தேவைப்படுகிறது. அண்மைக் காலமாக, பெரும் பொருட் பிரிவு அமைப்பு முறை (Divisio. nal Pattern of Organisation) 3 ban su & G : soal 4 sisi & மிகவும் பொருத்தமான தெனக் கருதப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிப் பணிகளைத் திறமையாகவும் சிக்கனமாகவும் விரிவாக்குவதற்கு இந்த முறை அதிக வாய்ப்பளிக்கிறது. பழைய முறையில் கண்காணிப்புப் பொறுப்புகளுடன் அந் தந்தத்துறைகளின் நூலகங்கள் செயல்படுவதால் நூல்களும் சாதனங்களும் தேவையின் றி ஒன்றுக்கு இருமடங்காகப் பெருகுவதுடன், ஆராய்ச்சி வசதிகளை ஒருங்கிணைந்த முறை யில் பெருக்குவதற்கும் அது தடங்கலாக இருக்கிறது. அமெரிக்காவில் நிலவிய பழைய நிலையே இன்று இந்தியா வில் நீடித்து வருகிறது. ஆகவே இந்தியாவில் பல்கலைக் கழக நூலகங்களின் அமைப்பு முறையை மாற் றி புதிய நிலைமைகளுக்கேற்ப நவீன வசதிகளோடு சீர்திருத்தி அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். து.ால்களே வாங்குவதிலும் தமது பல்கலைக் கழக நூலகங் கள் புதிய முறையைக் கையாள்தல் வேண்டும். இருக்கின்ற நூல்களையும் படிக்கவும் ஆராய்ச்சி நடத்தவும் தேவைப் படும் நூல்களே யும் தீர ஆராய்ந்து அறிந்து, அதன் பின் மிக வும் கவனமாக நூல்களை வாங்கதல் வேண்டும். எல்லா நூல்களையும் எல்லா நூலகங்களும் வாங்குவது இயலாது. அது சரியான செயலும் அன்று. எனவே, உடனுள்ள பிற பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு கூட்டுறவு அடிப்படையில் நூல் வாங்கும் திட்டத்தை வகுப் பது நல்லது. இந்தக் கூட்டுறவுத் திட்டத்தில் சேரும் நூலகங்களுக்குப் பொதுவான ஒரு நூலக நூற்பட்டி தயா ரித்த வைக்கலாம். ஆராய்ச்சி வசதிகளைப் பெருக்க வேண்டுமெனில், பல் கலைக் கழக நூலகங்களுக்கு வரும் பருவ வெளியீடுகளின் எண்ணிக்கை பலமடங்காகப் பெருக வேண்டும். இதிலும் கூட்டுறவு முறை பயனுடையதாக இருக்கும். பொதுவாக