பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 2. நூலக நாட்டில் நூற்றிருபது நாடகள் பின் தங்கிய நிலையிலிருக்கின்றன. தகுதியும், பயிற்சியும் பெற்ற ஊழியர்கள் இல்லாமையே இதற்கு முக்கிய கார ணம் எனலாம். தமிழ் நாட்டில் இன்று அரசாங்கத்தின ரால் நடத்தப்படுகின்ற பல கல்லூரிகளில் நூலகவியலில் பட்டம் பெற்ருேர் நூலகர்களாக இல்லாமலிருப்பது பெருங்குறையாகும். அவ்வாறே மாவட்ட நூலக ஆணைக் குழுவினரால் நடத்தப் பெறுகின்ற நூலகங்களே மேற் பார்வையிடுவதற்குப் பல மாவட்டங்களில் நூலகர் இல்லை என்பதும் நாம் அறிவோம். இதற்குக் காரணம், ஒன்று அவர்களுக்குப் போதிய ஊதியம் கொடாமலிருப்பது; மற் ருென்று அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு நூலக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டைபோடுவதாகும். இன்று கூட ஒரு சில கல்லூரிகளில் பயிற்சி பெற்ற முழு நேர நூலகர் பணியாற்றினுலும், அவர் புதிய முறைகளைப் புகுத்தி, கல்லூரி நூலகத்தினை விரைவில் வளரச் செய் வதைத் தடை செய்வது போன்று பழமையில் முழுக்க முழுக்க ஊறித் திளைத்த பேராசிரியர் ஒருவர் அவருக்கு மேற்பார்வையாளராக இருக்கிரு.ர். இம்முறை இன்று பொருந்துவதன்று. நூலகரும் ஒரு துறையின் தலைவர் என்ற நிலை ஏற்படின் அவர் உற்சாகமாகப் பணியாற்ற வழி உண்டு. அவருக்கு மேலதிகாரியாக கல்லூரி முதல்வர் ஒருவர்தான் இருக்க வேண்டும். மேலும் பேராசிரியர்கள், முதல்வர், நூலகர் ஆகியோர் அடங்கிய நூலகக்குழு நூல கருக்கு ஆலோசனை கூறலாம். கல்லூரி நூலகர் கல்லூரி விரிவுரையாளராகக் கருதப்பட வேண்டும் என்று கல்வி வல்லுநர் அறிக்கைகள் பல கூறினும் ஊதியத்தைப் பொறுத்தமட்டில் குறைத்தே கொடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். இது மிகவும் தவருன கருத் தாகும். பொதுக் கல்வியில் ஒரு பட்டமும், நூலகவியலில் ஒரு பட்டமும் ஆக இரண்டு பட்டங்கள் பெற்று வருகின்ற ஒருவருக்குக் குறைந்தது விரிவுரையாளர்க்கு உரிய ஊதிய மாவது இருத்தல் வேண்டும். மற்ருென்றும் இங்கு கருதத்