பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித சிறப்புக்கள் o II -- _o கொண்டு பொது நூலகங்கள் திறக்கப்படுவதற்கு அரசாங் கம் ஆதரவு நல்க வேண்டும். மேலை நாடுகளில் சில ஆண்டு களுக்கு ஒருமுறை நூலக விசாரணைக் குழுக்கள் நியமிக்கப் படுகின்றன. அக் குழுவினர் நூலகங்களை எல்லாம் பார்த்த பின்னர், தாலகத் துறையினர், பொது மக்கள் ஆகியோரது கருத்துரைகளையும் தெரிந்து கொண்டு, இறுதியில் சிறப்புக் களையும் குறைகளையும் எடுத்துக் காட்டி, குறைகளே நீக்கு தற்குரிய வழிவகைகளையும் வகுத்தனிக்கின்றனர். அக்குழு வினரது அறிக்கையில் காணும் கருத்துரைகளே காலக ஆட்சியாளர் மகிழ்ச்சியோடு வரவேற்று, நடை முறை யிலும் கையாண்டு. நூலக வளர்ச்சிக்கு ஆவன செய்து, றைந்த வெற்றியினையும், நிலத்த புகழினையும் பெறுகின்ற னர். அரசாங்கமும் இதற்குத் தனது ஆதரவை முழுமன துடன் நல்குகிறது. இதல்ை சிறந்த பயன்களை அனைவரும் பெறுகின்றனர். எனவே நமது தமிழக அரசாங்கமும் இத்தகைய குழுவொன்றினை நியமித்து, பொது நூலகங் களின் வளர்ச்சி பற்றி ஆராயச் செய்து இறுதியில் அக் குழு வினை அறிக்கை ஒன்றினத் தயாரித்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அக்குழுவினைச் சார்ந்த உறுப்பினர்களில் ஒரு சிலர் நூலகவியல் கல்வி அறிவுடையவர்களாக இருக்க வேண்டும்; ஒரு சிலர் சட்டசபை உறுப்பினர்களாகவும் அரசாங்க அலுவலராகவும் இருக்க வேண்டும். மற்றுஞ் சிலர் நூலகத்துறையில் அக்கறையும் ஆர்வமும் உடையவராக இருத்தல் வேண்டும். நூலகவியல் கல்வி பெற்று, சிறந்த அனுபவமும் ஆற்றலும் உடைய ஒருவர் இக்குழுவின் தலை வராக இருக்க வேண்டும். மேற்கூறியவாறு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைப் படி, குறைகளை நீக்குவதோடு, நிதிநிலையைச் சரிசெய்து கொண்டு, நாம் இத்துறை வளர்ச்சி யில் ஈடுபடுவோமாளுல் தமக்குச் சிறந்த வெற்றி உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இருக்கின்ற நூலகங்களைப் பலப்படுத்திய பின்னரே மேலும் நூலகங்களை நாம் திறக்க வேண்டும்.