பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 2 17 உதவும். இப்புதிய கட்டிடத்தில் தமிழ்மொழி-இலக்கிய ஆய்வுப் பகுதி ஒன்று நிறுவப்பட வேண்டும். தமிழ் மொழி யில் வெளியான, வெளியாகும் எல்லா நூல்களையும், பருவ வெளியீடுகளையும், அங்கு சேகரித்து வைக்கப்பட வேண்டும். இப்பகுதி ஆராய்ச்சியாளர்க்கும், பேராசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிதும் துணைபுரியும் வண்ணம் அமைக்கப்படுதல் வேண்டும். இந்நூலகம் இன்று பெயரள வில்தான் மாநிலத் தலைமை நூலகமாக உள்ளது. உண்மை யாகவே மேலைநாட்டு மாநிலத் தலைமை நூலகத்தைப் போன்று இந் நூலகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். எல் லாப் பொது நூலகங்களும் இந்நூலகத்தோடு இணைந்து, பொது நூலக வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். அந்நாள் என்று வருகிறதோ அன்றே நமது தமிழகப் பொது நூலக வரலாற்றின் பொற்காலம் தொடங்குகிறது என நாம் திண்னமாகக் கருதலாம். இந்நூலக வளர்ச்சிக்கும் நூலகத் துறையில் பயிற்சி பெற்ருேர் பலர் தேவைப்படுகின்றனர். மேற்கூறிய திட்டங்களை எல்லாம் இன்றைய நமது தமிழக அரசு நிறுவும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தமிழக மக்கள் உள்ளனர். நூலகத் துறையிலுள்னோர் தம்பிக்கையும் அதுவே ஆகும். இத்திட்டங்களே எல்லாம் நமது அரசு தீட்டிச் செயல்படுத்துமாகில் நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற நிலை தமிழ் நாட்டில் உறுதியாக ஏற்படும். அன்றுதான் மக்கள் குடியாட்சியின் பயன்களை உண்மையாகத் துய்க்க இயலும். குடியாட்சியும் முழு வெற்றியினைப் பெறும். அதனல் நாடு நாடாகத் திக ழும். மக்கள் மகிழ்வர். நம்மை உலகம் போற்றும். நூலகர் பரிமாற்றத் திட்டம் நூலகர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா செல் பவர்கள், அங்கு அறிமுகப் பயிற்சிக்காலத்தில் (Internship period) சில குறிப்பிட்ட துறைகளில் பயிற்சிபெற வாய்ப் பளித்தால், இத்திட்டம் இன்னும் பயனுடையதாக அமை