பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 & நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் எழுதிய கடிதம் ஒன்றில், உங்கள் நாடு, சிறந்த அறிஞர் ச8ளப் பெற்றிருக்கிறது. நீங்கள் எங்களோடு தங்கியிருந்த பொழுது சில நல்ல கருத்துக்களே எங்களுக்கு அளித்து உதவினிர்கள். அக்கருத்துக்களே எங்கள் மாணவர்கள் தங்களுடைய மனதிலே நன்ருக இருத்தி வைத்திருக்கிருர் கள். அவைகளைப் பற்றிச் சில கட்டுரைகளும் எழுதச் சொல்லியிருக்கிறேன். சுருங்கக் கூறின், எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதைவிட, உங்களிடமிருந்து நாங் கள் பெற்றுக்கொண்டதே அதிகம்' என்று குறிப்பிட் டிருந்தார்கள். பேராசிரியர் டாக்டர். சுவாங்க் அவர்களும் என்னை நல்ல முறையில் வரவேற்றுப் பேராசிரியர்களனைவரிடமும் அறிமுகப்படுத்தி, நான் சிரமம் ஏதுமின்றி தங்குதற் பொருட்டு எல்லா வசதிகளையும் தானே நேரில் கவனித்துச் செய்து உதவிஞர்கள். மேலும், பல சொற்பொழிவு களாற்றுவதற்கும் அவர்கள் வசதி செய்து தந்தார்கள். பேராசிரியர் சுவாங்கும் அவரது மனைவியாரும் நம் நாட் டிற்கு வந்து சென்றவர்களாவர். எனவே, நம்மைப் பற்றி அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். பேராசிரியர் சுவாங்க் அவர்களுக்கு நமது நாட்டு இசையின் மீது தணியாத காதல் உண்டு. சில இரவுகள் அவர்கள் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்துாட்டி மகிழ்ந்த தோடு, இசைப் பயிற்சியில்லாத என்னைத் தமிழ்ப் பாடல் கள் பலவற்றைப் பாடச் செய்து, தமிழிசையைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நான் பாடிய பாடல்கள் அகனத்தையும் நாடாவில் பதிவு செய்து வீட்டில் வைத்துக் கொண்டார் கள். தமிழ்நாட்டு வில்லிசை அவர்களுடைய மனதை மிகவும் கவர்ந்தது. பொதுவாக அமெரிக்க மக்களனைவரும் நாடோடிப் பாடல்களைப் பெரிதும் விரும்புகின்றனர். நான் சென்றவிடமெல்லாம் என்னை நாடோடிப் பாடல்களைப் பாடச் சொல்லித் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்தனர்.