பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் எனது சுற்றுப்பயணத்தின்பொழுது 57 நூலகங்களைப் பார்வையிட்டேன். அவைகளாவன: தேசிய நூலகங்கள் 2: பல்கலைக்கழக நூலகங்கள் 12: நூலகவியல் பள்ளிகள் நடத்தும் நூலகங்கள் 10: சிறப்பு நூலகங்கள் 6: கல்லூரி நூலகங்கள் 3: பள்ளி நூலகங்கள் 3; தொடக்கப் பள்ளி நூலகங்கள் 3; மாநில நூலகங்கள் 2: நகர நூலகங் கள் 6: மாவட்ட (கவுண்டி) நூலகங்கள் 10. இதையெல்லாம் பார்த்த பின், அமெரிக்காவில் நூலகங் கள் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றம் என் உள் ளத்தில் வியப்பை உண்டாக்கியது. இந்த நிலை நம் நாட்டில் ஏற்படும் நாள் என்னுளோ?’ என்று மனம் ஏங்கியது.