பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவிங்கள் 24.1 தது. அவர்களது பெயர் திருமதி. ஆர்த்ரா (Arara) ஆகும். அவர்கள் சிறந்த குடும்ப வாழ்க்கையை அமைதியாக இனிமை பொங்க நடத்த வேண்டும் என்ற பெருவிருப் புடையவர்கள். அவர்களது கணவரான பொறியியல் வல்லுநர் திரு ஜெர்ரி பிட்ஜெரால்டு (Jerry Fitzerald) அவர்களும் அதே நோக்கமுடையவர்கள். இருவரும் சிறந்த உழைப்பாளிகள், பிறரை இனிமையாக வரவேற்று. அவர் களுக்கு உதவி புரிவதில் பேரின்பம் காண்பவர்கள். அவர் களுக்கு சான் பிரான்சிஸ்கோவிலும் ஒர் இல்லம் (Apartment) இருந்தது. நான் சான் பிரான்சிஸ்கோவில் 10 நாட் கள் தங்கவிருக்கின்றேன் என்பதை அறிந்ததும் அவர்க ளாகவே தங்கள் இல்லத்தில் நான் தங்கலாமென்று கூறி, நான் சான் பிரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்ட நாளன்று அவர்களிருவரும் வந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்புக் கூறி,தங்களது ஊர்தியிலேயே என்னைச்சான்பிரான்சிஸ்கோ விற்கு அழைத்துச் சென்று, அவர்களுடைய இல்லக் கத வினைத் திறந்து இடமளித்தனர். ஒருநாள் முழுவதும் என்னுடனிருந்து வீட்டு அறைகளையும் சாமான்களையும் பிற கருவிகளையும் காட்டி அவற்றைப் பயன்படுத்துவது பற்றியும் விளக்கிச் சென்றனர். விலை உயர்ந்த பொருள் கள் பல வீட்டிலிருந்தும் அவர்கள் என்னே முழுக்க முழுக்க நம்பி இல்லத்தை எனது பொறுப்பிலேயே விட்டுச் சென்றமை இன்றும் என் மனதில் பசுமையாக விளங்கு கின்றது. அவர்களது பேருள்ளத்தை, பிறருக்கு உதவ வேண்டுமென்ற பேரார்வத்தை என் சொல்லி வாழ்த்து வது? நான் சான் பிரான்சிஸ்கோவை விட்டு நீங்கிய நாளன்று கூட அவர்கள் திரும்பி வந்து எல்லாம் சரியாக இருக்கின் றனவா என்றுகூடப் பார்க்கவில்லை. வீட்டுச் சாவியை முகப்பிலிருந்த தபால் பெட்டியில் போடச்சொல்லி ஒரு கடிதம் மட்டுமே எனக்கு எழுதி இருந்தார்கள். பிறரிடம் நூ-16