பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயான அனுபவங்கள் == அவர்கள் மிகுந்த அக்கறை காட்டினர்கள். அது நோய் வாய்ப்பட்டிருந்த எனக்குப் பெரும் ஆறுதலையும் உரண்யும் தந்தது. விருந்தோம்பல் பொதுவாக, அமெரிக்க மக்கள் முன்னர்க் கூறியது போன்று பிறரோடு அன்போடு பழகுகிரு.ர்கள். பிறர் துன்பத்தைத் துடைக்கத் தங்களாலியன்றதை மனமுவந்து செய்கின் ருர்கள். தங்களைப் பற்றி பிறர் நன்கு அறிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிரு.ர்கள். அவ்வாறே பிற ரைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிருர்கள். இதன் காரணமாகக் குறிப்பிட்ட நாளிலே விருந்தொன் றுக்கு ஏற்பாடு செய்து, பிறரை அன்போடு வரவழைத்து விருந்து படைத்து, இரவு வெகுநேரம் பேசி மகிழ்கிருர்கள். நான் அங்கிருந்த 120 நாட்களில் ஏறத்தாழ 30 இல்லங்க ளுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்த்தேன். அவர்களது வாழ்க்கையைப்பற்றி ஒரளவு நன்ருக அறிந்து கொள்வதற் குப் பெரும் வாய்ப்பாக ஒவ்வொரு விருந்தும் அமைந்தது. பொன் விளையும் பூமியாக இருந்தாலும் கணவனும் மனைவியும் அடுத்த ஆண்டில் ஏற்படும் செலவு பற்றி முந் திய ஆண்டே சிந்தித்து அதற்கேற்ற வகையில் தங்களு டைய பொருளாதார நிலையைச் சரிசெய்து கொள்கிருர் கள். இல்லையெனில் அடுத்த ஆண்டுக்குரிய வருமானத்தை முன்னரே அறிந்து அதற்கேற்ற வகையில் தங்களின் செல வுத் திட்டத்தை அமைத்துக்கொள்கின்றனர். சில அமெ ரிக்கப் பெண்கள் நிறையப் படித்திருந்தும் கூட வேலைக்குச் செல்லாமல் குடும்பப் பணியிலேயே முழுக்க முழுக்க ஈடுபட் டுள்ளனர். அதனைப் பெருமையாகவும் கருதுகின்றனர். வேறு சில பெண்கள் சைவ உணவையே உண்டு வருகின் றனர். அதனைப் பெருமையோடு என்னிடம் கூறவும் செய் தனர்.