பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் வரலாற்றுச் சிறப்பினையும் பண்புநலன்களையும் பற்றி அமெரிக்க மக்கள் போதிய அளவு அறிந்திருக்கவில்லை என் பது வருந்து தற்குரியதே. எனவே நமது அரசினரும் அங்கு செல்கின்ற நம் நாட்டவரும் இதற்கு வேண்டிய வழிவகை களைக் கடைப்பிடித்து நம்மைப் பற்றி மேலும் அறியச் செய்தல் வேண்டும். மேலும் அமெரிக்க நாட்டுக்கு அழைப் பின்பேரில் செல்கின்றவர்கள், போவதற்கு முன் நம் நாட்டைப்பற்றி தன்கு அறிந்து கொண்டு சென்ருல் அது நமக்கும் நம் நாட்டிற்கும் நல்ல பயனை அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே, அழைப்பின்பேரிலும், பணியின் பொருட்டும், கல்வி பயிலவும் வெளிநாடு செல் கின்றவர்களுக்கு மத்திய அரசினரே ஒரு வாரக்காலம் பயிற்சியளித்து, நமது நாட்டின் வரலாற்றுச் சிறப்பை, சிறந்த பண்புகளை, நாகரிகம், இலக்கிய வளம், அறிவு வளர்ச்சி முதலியவற்றை அவர்கள் நன்கு அறிந்து செல்வ தற்குரிய நிலையை ஏற்படுத்த வேண்டும். இதஞல் நமக்கு நன்மை உண்டு; நாம் செல்கின்ற நாட்டுக்கும் நன்மை உண்டு. அதாவது இருவரும் முழுப்பயனையும் துய்க்க முடியும்.