பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் int) மலைகளுக்கும், ஆமார் கோசா (Amargosa) மலைகளுக்கு மிடையில் இம்மாநிலம் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் குறுக்கு நீளம் 150 மைலிலிருந்து 365 மைல்வரை வேறு -படுகிறது. அலாஸ்கா தவிர, அமெரிக்காவின் கடற்கரைப்பகுதி யின் ஐந்கில் மூன்று பாகம் கலிபோர்னியா மாநிலத்தி லேயே அமைந்திருக்கிறது. இம்மாநிலக் கடற்கரையின் நீளம் 1000 மைல். கடற்கரையோரமாகப் பல மைல் துாரத் திற்குக் கடற்கரை மலைத்தொடர் (Coast Range) இருக் கிறது. மாநிலத்தின் மையப் பகுதியில் அகலமான மத் தியப் பள்ளத்தாக்கு (Central Walley) உள்ளது. சாக்ர மெண்டோ, சான்ஜோக்வின் முதலிய ஆறுகள் இப்பள்ளத் தாக்கில் பாய்ந்து, சாக்ரமெண்டோ நகரின் அருகில் ஒன்ருகக் கலந்து, பிறகு மேற்காக ஓடி, சான் பிரான் சிஸ்கோ துறைமுகத்தின் வழியாகக் கடலோடு கலக்கிறது. இப்பள்ளத்தாக்கிற்குக் கிழக்கில் நெடிதுயர்ந்த சியெரா நெவடா (Sierra Neweda) மலைத்தொடர் தென் வடலாக அமைந்துள்ளது. இம்மலைத் தொடர், அமெரிக்காவின் பிற பகுதிகளையும் இம்மாநிலத்தையும் பிரிக்கும் நெடுமலைச் சுவராக அமைந்திருக்கிறது. சின்னஞ் சிறு ஏரிகளும், பயங்கர நீரோட்டமுடைய நீரோடைகளும் உயர்ந்த மலைச் சரிவுகளில் மிக அடர்ந்த பைன் மரக்காடுகளும் நிறைய உள்ளன. சியெரா நெவடா மலைத்தொடரில் 14,000 அடிக்குமேல் உயரமுள்ள 11 சிகரங்கள் இருக்கின் றன. அமெரிக்காவிலேயே அதிக உயரமான விட்னி சிகரம் (Mount Whitney) இங்குதான் இருக்கிறது. இதன் உயரம் 14, 495 அடி. உயர்வும் தாழ்வும் சியெரா நெவடா மலைக்குத் தெற்கிலும் கிழக்கிலும் மோஜாவ் பாலைவனம் உள்ளது. இப்பாலைவனத்தில்தான், மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) இருக்கிறது. இது