பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T of நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் குளிர் நிலவுகிறது. பசிபிக் கடலிலிருந்து உள்நாட்டை நோக்கி வீசும் ஈரக் காற்றை, இம்மாநிலத்திலுள்ள சியெரா மத்ரே மலைத் தொடர் (Sierra Madre) தடுப்பதால், இம்மாநிலத்தின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு 3 அங் குலத்திலிருந்து 100 அங்குலம் வரை மாறுபடுகிறது. தெற்கிலுள்ள பாலைப் பகுதிகளில் ஆண்டு மழை 3 அங் குலம்; வடமேற்குப் பகுதியில் 100 அங்குலம். விவசாயச் செழிப்புள்ள பகுதியில் ஆண்டு மழை 30 அங்குலம். தொன்மையான மரங்கள் பருத்து உயர்ந்த மரங்களுக்குக் கலிபோர்னியா பெயர் பெற்று விளங்குகிறது. உலகிலேயே மிகப் பழமையும் உயர்ந்தவையுமான சிக் குவாயா என்ற செம்மரங்கள் இங்கு தான் உள்ளன. இந்த மரம் இம்மாநிலத்தின் தேசிய மரம் என மதிக்கப்படுகிறது. இம்மாநிலத்தின் தேசிய மிருகம் கரடி, தேசியப் பறவை குயில் தேசிய மலர் கோல்டன் List J 17 (Golden Poppy). அமெரிக்காவிலேயே இயற்கைக் காட்சிகள் நிறைந்த எழில் வாய்ந்த மாநிலம் கலிபோர்னியா. 12,865 அடி உயரத்திலுள்ள தாஹோ (Tahoe) ஏரி மிகவும் அழகானது; படிகம்போல் தெளிந்த நீருடையது. இருல் மட்டுமே காணப்படும் மோனே ஏரி இம்மாநிலத்தில்தான் இருக் கிறது. இந்த ஏரியை அமெரிக்காவின் சாக்கடல் (Death Sea) என்பர். உலகில் காணும் எல்லா விலங்குகளும், பறவை இனங்களும் இம்மாநிலத்திலுள்ள காடுகளில் வாழ் கின்றன. இவற்றில் கரடி, ஒநாய், மான், மலையாடு, செம் மறியாடு, முயல் முதலிய மிருகங்களும், மரக்கொத்தி, பல விதக் கடற் பறவைகளும், சங்கிலிக்கறுப்பன் என்னும் நச்சுப்பாம்பு, காட்டுப்பல்லி ஆகிய பிராணிகளும் குறிப் பிடத்தக்கன. இம்மாநிலத்தில் 18 தேசியக் காடுகள் உள்ளன. மாநில அரசாங்கம் 172 பூங்காக்களை அமைத்துப் பாதுகாத்து வருகிறது.