பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சமுதாயம் அமைந்தது. அமெரிக்காவில் பரம்பரையான உயர் குடிகள் (Upper class) என்று யாருமே இருந்த இல்லை. எனவே அங்கு வர்க்கப்போராட்டத்திற்கு இடமே ஏற்படவில்லை. அமெரிக்காவிலும் புரட்சி ஏற்பட்டது உண்மை. அப்புரட்சி, அன்னியர் ஆதிக்கத்தை ஒழித்துச் சுதந்திரம் பெற நடந்த அரசியல் புரட்சி. 1789-இல் பிரான்ேைலா, 1917-இல் இரசியாவிலோ நடந்ததுபோன்ற சமுதாயப் புரட்சி அல்ல. ஐரோப்பிய நாடுகளில், வர்க்க பேதமும் அதனல் எழுந்த உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வும் தலைவிரித்தாடிய காரணத்தால் வர்க் கப் போராட்டத்தின் அடிப்படையில் பிறந்த மார்க்சிசக் கொள்கை அந்நாடுகளில் எளிதில் ஊடுருவிச் செல்வாக்குப் பெற ஏதுவாகியது. ஆல்ை, அமெரிக்காவில் தொழி லாளர் சமுதாயத்தில்கூட வர்க்கபேதம் இல்லாமையால், @Lirrigați –«» un 3, 45:5 gusuth (Corraintinistr ) நுழைவதற்கு இடமே ஏற்படவில்லை. எனவே பொதுவுடமை இயக்கம் வலுவான அரசியல் கட்சியாக உருவாக இய லவில்லை'. தொழிலாளர் இயக்கம் கமுதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிடையே போராட்டம் தவிர்க்கமுடியாத ஒன்று' என்ற கொள்கையை வற்புறுத்திவரும் அனைத்து நாட்டுத் தொழி aurran figuri, oftco (International workers of the world), இருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக் காவில் ஒரளவு ஆதரவு ஏற்பட்டது. ஆயினும், அவ்வியக் கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 75,000-க்கு மேல் எட்டவில்லை. சிறிது காலத்திற்குப்பின். அந்த இயக்கமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. பின்னர் தோன்றிய பொதுவுடமை இயக்கமும் இன்றுவரை அங்கு வேரூன்ற முடியவில்லை. மாருக, அமெரிக்கத் தொழிலாளர் இயக்கமானது, தனித்தன்மையுடன் ஆக்கத் திற்கு ஊக்கமளிக்கும் உருவான சக்தியாக உருப்பெற்றுத் தழைத்தோங்கி வளர்ந்திருக்கிறது. இவ்வியக்கம், மற்ற