பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகங்கள் - 7.3

வகை அலுவலர்களும் நியமிக்கப்படுகிரு.ர்கள். ஒவ்வொரு பாலகத்திலும், நூலகம் திறந்திருக்கும் நேரத்தில், குழந்தை களுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதற்காக நூலகத் தொழில் உதவியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். குழந்தை நூலகர்கள் எத்தனை பேர் வேண்டும் என்பதைப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு கணக்கிடு கிரு.ர்கள். நூலகம் இயங்கும் வட்டாரத்தில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை நூல்கள் பயன் படுத்தப்படுகின்ற அளவு, நூலகச் செயல் திட்டங்களின் அளவு, நூலகத்தின் அமைப்பு முறை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் ஒரு நூலகத்திற்குத் தேவைப்படும் நூலகர் களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு நூலகத் தில் பெரியவர்களுக்கான நூல்களை விடக் குழந்தை நூல் கள் அதிகமான அளவில் பயன்படுத்தப்படலாம். அந்த நூல கத்திற்கு ஒரே ஒரு நூலகர்தான் அனுமதிக்கப்பட்டிருப்பா ரெனில், குழந்தை நூலக நிபுணராகவும், பொது நூலகப் பணியில் ஒரளவு பயிற்சி பெற்றவராகவும் உள்ளவர் அங்கு நூலகராக நியமிக்கப்படுகிரு.ர். குழந்தை நூலகப் பணிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள சிறுவர், சிறுமியர்க்கு மட்டுமின்றி, வயது வந்தவர்களுக்கும் கூடப் பணியாற்றும் வகையில் குழந்தை நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு ஏற்றபடி குழந்தை நூலக அலுவலர்களின் பணி களும் வரையறுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான நூல் களினலும், குழந்தை நூலகங்களினலும் ஏற்படும் அள வற்ற நன்மைகளையும், அவற்றைப் பயன்தரும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தையும் சமுதாய மக்கள் அ&னவரும் உணர்ந்து கொள்ளச் செய்வது குழந்தை நூல கங்களின் முதற் கடமையாக இருந்து வருகிறது. குழந்தை நூல்களையும், படிப்பதற்குரிய மற்ற நூல்களே பும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வீடுகளில் எடுத்