பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B 2 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் _ என்று எண்ணும் அளவிற்கு அமெரிக்கப் பள்ளி நூலகங் களின் முக்கியத்துவம் வளர்ந்திருக்கிறது. நூல்களை வாங்கி வாங்கி அடுக்கி வைப்பதுதான் நூலகம் என்ற நிலைமை மாறி, பள்ளியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இன்றி யமையாது பங்குகொள்ளும் நிலையங்களாகப் பள்ளி நூல கங்கள் இன்று திகழ்கின்றன. அமெரிக்க ஐக்கியக் குடியரசில் விளங்கும் நூலகங் களின் பல்வேறு பணிகள் வருமாறு: 1. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்ருே ர்கள், மற்றப் பொதுமக்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பள்ளியின் செயல் திட்டத்தில் தீவிரப் பங்கு கொள்ளுதல். 2. நூல்களும் மற்ற நூலகச் சாதனங்களும் சிறுவர் களுக்கும், சிறுமியர்க்கும் தேவையான நேரத்தில் கிடைக்கும்படிச் செய்தல், தங்கள் பணிகள்மூலம் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் அறிவாற்றல் பெற்றுச் சீரிய முறையில் வளர்வதற்கு உதவி புரிதல். ச. மாணவர் கல்வி பெறும் காலத்தில், பயன் மிக்க, உள்ளத்திற்கு இன்பந் தரவல்ல எல்லாவித நூல் களையும் படித்து அறிவு பெறவும். படித்த நூல் களின் தன்மையினை மதிப்பிடவும் வழிகாட்டி ஆர்வத்தை ஊட்டுதல். 4. நூலகத்தில் பெறுகின்ற அனுபவ அறிவின் மூல மாகப் பிறரைக் கவரும் வண்ணம் தங்களுடைய பழக்க வழக்கங்களைச் சீரமைத்துக் கொள்ளவும், சீரான சமூகக் கண்ணுேட்டத்தை உருவாக்கவும் மாணவ மாணவிகளுக்கு உதவுதல். நூலகத்தில் உள்ள நூல்களேயும், மற்ற நாள், வார, ஆண்டு என்ற வகைப் பருவ வெளியீடுகளையும், கண் 5.