உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுத்திரம்

133

அக்கூஸ்ட்தான் காத்து இருக்கணுமே தவிர, அக்கூஸ்டுக்கு போலீஸ் காத்திருக்க முடியாது. ஏன்னு எங்க வேலை அப்படிப்பட்ட வேலை.”

“ஓங்க வேலை எப்படிப் பட்ட வேலைன்னு எல்லோருக்கும் தெரியும். இப்போ எனக்கும் மெட்ராஸ்ல வேலை இருக்கு.”

“அப்படின்ன நாளைக்கு வாங்க.”

“நான் மெட்ராஸ் போறேனே.”

“நீங்க எங்கே போனால் எனக்கென்ன. கூப்பிட்ட நேரமில்லாம் நீங்க வரணும். அவ்வளவுதான் சொல்வேன். போலீசிற்குன்னு சில பொறுப்புண்டு. ஒங்களை எங்களுக்கு வசதிப்பட்ட நேரத்துல விசாரிக்க போலீசுக்கு உரிமையுண்டு.”

“நீங்க கடைசியாய் சொன்னீங்க பாருங்க ‘உரிமை’ அந்த வார்த்தையிலதான் சார் அடிப்படைக் கோளாறே இருக்கு. நீங்க கடமை செய்யுறதுக்காக கொடுத்திருக்கிற அதிகாரங்களை உரிமையாய் நினைக்கிறீங்க. கடமை யாற்றுவதை ஏதோ சலுகை காட்டுறதாய் நினைக்கிறீங்க. இதுதான் இந்த நாட்ல... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல மட்டுமில்ல... எல்லா டிபார்ட்மெண்ட்லயும் இருக்கிற அடிப்படைக் கோளாறு. நீங்க சொல்றதைப் பார்த்தால், யாரோ ஒருவர், எவரையோ ஒருவரைப்பற்றி, ஒரு புகார் கொடுத்திட்டால் போதும். நீங்களே ஒருவரை அக்கூஸ்டா நெனைத்து என்ன வேணுமானாலும் செய்யலாம். இதுதான் இன்றைய சட்டமுன்னால், இந்த நாடு, நாடல்ல; பெரிய லாக்கப் அறை. அகலமான குற்றவாளிக் கூண்டு. திறந்த வெளிச் சிறைச்சாலை. சரி... என்னை விசாரிக்கப் போறீங்களா இல்லையா?”

“மிரட்டுறீங்களா?”

“அப்படி வேண்டுமானாலும் வச்சுக்கங்க. நான் இப்போ வெளியேறப் போறேன். என்னை வேண்டுமானல் லாக்கப்புல தள்ளுங்க. ஐ டோன்ட் கேர்.”