பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

175

தோட்டத்திலும், போலீசாரிடமும் புலம்பியது போலவே கனகமும் புலம்பினாள், அவள் கணவனை கண்டபடி திட்டினாள், லாக்கப்காரர்களின் மனைவிகள் அவளை விடவில்லை.

“நீ சொல்லிக் கொடுத்துத்தாண்டி ஒன் புருஷன் பைத்தியாரத் தர்மரைக் கொன்னான். அப்பாவிப் பொண்ணை அலங்கோலம் பண்ணுனான். அந்த சோம்பேறிப்பயல் எங்கடி இருக்கான்? சொல்றியா, சொல்ல வைக் கட்டுமா?” என்று அவள் தலை முடியைப் பிடித்து இழுத்தார்கள். அந்தச் சமயத்தில், ஊருக்குள் ‘தீவிர’ புலன் விசாரணை செய்வதற்காக மூன்று போலீசார் மட்டும் வராதிருந்தால், மிஸ்ஸஸ் முத்துலிங்கமும், அவள் மாமனாரும், படாதபாடு படவேண்டியதிருக்கும்.

போலீசார், அவர்களை மீட்டியதுடன், மிரட்டியவர்களை அதட்டினார்கள். ஆண்களை அடித்தார்கள். பெண்களை அடிக்கப் போவதுபோல், கைகளை ஓங்கினார்கள். “தொலைச்சிப் பிடுவோம் தொலைச்சி” என்றார்கள். லாக்கப்கார குடும்பத்தினரும், எந்த வேகத்தில் முதலில் கோபப்பட்டார்களோ, அதே வேகத்தில் இப்போது பயந்தார்கள். போலீசாரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். முத்துலிங்கம் மனைவி, தன்னையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போல எகிறப் போனாள். போலீசார், அவளையும் கையோங்கினார்கள்.

மறுநாளிலிருந்து, இரண்டு போலீசார், முத்துலிங்கம் வீட்டில் காவலுக்குப் போடப்பட்டார்கள். இன்னும் காவல் காத்து வருகிறார்கள். தற்செயலாய், அந்தப் பக்கமாய் போகிறவரையும் அதட்டுகிறார்கள். பணமோ, செல்வாக்கோ அல்லது இரண்டுமோ இடையில் விளையாடி விட்டது என்பதையும், இயல்பான மனிதாபிமானத்தில் துவக்கத்தில் துடித்துப் பேசிய போலீஸ் வாய்கள், ‘இனிப்புக்களாலோ’ அல்லது இன்புளுயன்சாலோ