உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

41

மாட்டாரா? பணக்காரன் வீட்ல அல்சேஷன் நாய் மாதிரி, போலீஸ் கையில சட்டம்; இல்லியா சப்-இன்ஸ்பெக்டர்?"

சப்-இன்ஸ்பெக்டர் டக்கென்று பதில் சொன்னார்:

‘'இப்படியும் சொல்லலாம்... வாத்தியாருங்க கையில பரீட்சை பேப்பர் சிக்கிக்கிறது மாதிரி...சட்டம் எங்க கையில். நானே... பரீட்சை மார்க் மோசடி விஷயமாய் ஒரு கேஸ் புக் பண்ணியிருக்கேன்...”

இளநீரை முடித்துவிட்டு, எல்லோரும் எழுந்தார்கள்’ ஊர் முனைவரைக்கும் ஒன்றாக நடந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தார்கள். வடக்கு நோக்கி, எள்ளுத் தோட்டத்துக்குள்ளே நெகிடெத்துச் சென்ற ஒற்றையடிப் பாதையில் தாமோதரனும், கையில் ஒரு கட்டு அகத்திக்கீரையுடன் வினைதீர்த்தானும் ஒன்றாக நடந்தார்கள்.

பொன்மணி அவர்களோடு போகாமல், தமிழரசியுடன் நடந்தாள். தமிழ், வீட்டுக்குப் போகாமல் தன்னோடு வரும் அவளை, ஆச்சரியத்தோடு பார்த்தாள். பொன்மணியின் துயரம், மகிழ்ச்சியாக இருந்த தமிழரசிக்குத் தெரியவில்லை. இதற்குள் கலாவதி, இடையில் பிய்த்துக்கொண்டாள். மாட்டுக்குப் புல் வெட்டிக்கொண்டு வரவேண்டுமாம்! போகும்போது தமிழரசியைப் பார்த்து, ‘எக்கா, ஆறு மணிக்கு மேல அந்தக் கிணத்துப்பக்கம் பாம்பு நடமாட்டம் அதிகம்...” என்று சொல்லி, பிறகு அவளே வெட்கப்பட்டு ஓடிவிட்டாள்.

கலாவதி தூண்டிவிட்ட உள்ளத்து சுடர்விளக்கின் ஒளியுள் ஒளிந்து, நடப்பது தெரியாமலே நடந்த தமிழரசியின் முன்னால் நின்று, வழிமறித்து, பொன்மணி தேம்பினாள். பிறகு உடைந்த குரலில் ஒப்பித்தாள்:

"அண்ணி... நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். எனக்கு...இந்த நாகர்கோவில் கல்யாணத்துல இஷ்ட