பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

பெயர்

மெஜெல்லன் என்பார் இதைக் கடந்த பொழுது வானிலை மிக நேர்த்தியாக இருந்தது; கடல் அமைதியாக இருந்தது. ஆகவே, அவர் இதற்குப் பசிபிக் என்று பெயரிட்டார். ஆனால், இதன் பல பகுதிகளில் கடும் புயல்களும் உண்டாகும். இதில் மூடுபனியும் ஏற்படும்.

இதற்கு உலகப் பெருங்கடல் என்னும் பெயரும் உண்டு. ஜெர்மானியர் இதை மாபெருங்கடல் என்பர்.

உலக மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை இது அடைத்துக் கொண்டுள்ளது. அதேபோல் உலக நீர்ப் பரப்பில் பாதியையும் இது அடைத்துக் கொண்டுள்ளது. அனைத்துலக நாட்கோடு என்னும் கற்பனைக்கோடு இதன் வழியாகச் செல்கிறது. இக்கோட்டில் நாள் மாற்றம் ஏற்படும்: சனி ஞாயிறாக மாறும்.

ஆறுகள்

ஆசியச் சரிவுகளில் இருந்து வரும் பெரும்பாலான ஆறுகள் இதில் கலக்கின்றன. அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவான நீரே இதில் கலக்கிறது. எனவே, இதன் அளவை நோக்க, ஆற்று வடிகால் (river drainage) மிகச் சிறியதே.

ஆழம்

இதன் அதிக ஆழம் கிட்டத்தட்ட 6 மைல். எவரெஸ்ட் மலை உச்சியை இதில் மூழ்கச் செய்தால்,