உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


இதன் தீவுகள் இரு வகைப்படும்: கண்டத் தீவுகள், கடல் தீவுகள்.

கண்டத் தீவுகள் ஆசியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் துண்டுப் பகுதிகள் ஆகும். இந்த இரு கண்டங்களுக்கிடையே உள்ள நீர் மூழ்குச் சம்வெளியில் (Submarine plateau) மேற்கூறிய கண்டத் தீவுகள் உள்ளன. இவற்றிற்கு ஜப்பான் தீவுகள், பிலிப்பைன் தீவுகள் முதலியவை எடுத்துக் காட்டுகள்.

கடல் தீவுகள் எரிமலை அல்லது பவழத்தால் ஆனவை. இவற்றிற்கு சேண்ட்விச் தீவுகள், நியூசிலாந்து முதலியவை எடுத்துக்காட்டுகள்.

உள்நாட்டுக் கடல்கள்

இதன் மேற்குக் கரையில் உள்நாட்டுக் கடல்கள் அதிகம் உண்டு. இவை ஆழமற்றவை; சிறியவை. இவை பெரிய விரிகுடாக்கள்; தீவுகளால் சூழப்பட்வை. இவற்றிற்குப் பெரிங்கடல், ஜப்பான் கடல், மஞ்சள் கடல், சீனக் கடல் முதலியவை எடுத்துக்காட்டுகள்.

நீரோட்டங்கள்

இதிலுள்ள முக்கிய நீரோட்டங்களாவன: நடுக்கோட்டு நீரோட்டம், பெருவியன் நீரோட்டம், ஜப்பான் நீரோட்டம்.


நடுக்கோட்டு நீரோட்டம் மெதுவாக மேற்கு நோக்கிச் செல்வது; வட, தென் நடுக்கோட்டு நீரோட்டங்கள் என இரு வகைப்படும்.