பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


தாக்கி அவற்றைத் தன் வசம் ஆக்கிக் கொண்டது. இவ்வாறு அது திறமையாகவும், திட்டமுடனும், பரவலாகவும் தாக்குதல் நடத்திற்று. இத்தாக்குதலுக்கு ஜப்பான் பல ஆண்டுகள் முன் கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். இல்லாவிடில், அதன் தாக்குதல் அவ்வளவு வலுவுள்ளதாக இருந்திருக்க இயலாது.

திட்டமிட்டு இந்தியாவைச் சீனா தாக்கியது போலவே, ஜப்பானும் அமெரிக்காவைத் தாக்கிற்று.

இடம்

போர் நடந்த இடம் பசிபிக் பகுதிகளில் ஆகும். குறிப்பாக, பசிபிக்கின் தென்மேற்குப் பகுதியிலும், மையப் பகுதியிலும் போர் பரவலாக நடந்தது.

நாடுகள்

வலியப் போர் தொடுத்தநாடு ஜப்பான். எதிர்த்துப் போர் தொடுத்தநாடு அமெரிக்கா. மற்றும், ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் அமெரிக்காவிற்கு துணை செய்தன.

அரவணைப்பு நிலை

படைத்திற நிலையில் பார்க்க, 1941ஆம் ஆண்டு. பிற்பகுதியில் போர் நிலை ஜப்பானின் ஏகாதிபத்யப் பேராசைக்கு அரவணைப்பாகவே இருந்தது.

அட்லாண்டிக் போரில் ஏற்பட்ட சோர்வினால், பிரிட்டன் பசிபிக் போரில் கலந்துகொள்வது கடினமாக இருந்தது. பிரான்சு, ஜெர்மன் கட்டுப்பாட்-