உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

€ஜப்பானுக்குச் செய்பான் (Saipan) வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. நட்பு நாடுகள், இறுதியாக, ஜப்பானத் தீவிரமாகத் தாக்கின. சிறப்பாக, ஒக்கினவாவிற்காக நடந்த போர் மிகக் கடுமையானது. கடைசி மூச்சு இருக்கும் வரை ஜப்பானியர் கடுமையாகப் போராடினர். இருப்பினும், ஒக்கினாவா வீழ்ந்தது. நட்பு நாடுகளின் தாக்குதல் ஜப்பானைத் திணற அடித்தது.

அணுக்குண்டு அடக்கியது

முதல் அணுக்குண்டு ஹிரோ ஷிமாவிலும், இரண்டாம் அணுக்குண்டு நாகசாகியிலும் அமெரிக்காவால் போடப்பட்டது. ஜப்பான் போருக்கு முற் றுப் புள்ளி வைக்கப்பட்டது. வல்லரசுகளை ஆட்டி வைத்த ஜப்பான் தலை எடுக்க முடியாமல் பெட்டிப் பாம்பு போல் அடங்கிற்று. எல்லாம் இரண்டு அணுக்குண்டுகள் செய்த வேலை !