உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. பசிபிக் வழிகள்

கடல் வழிகள்

பசிபிக்கின் கடல்வழிகள் அண்மைக் காலத்தில் உண்டானவை. மேற்கு வட அமெரிக்காவிலிருந்து சீனா, ஜப்பான் வரை ஒரு வழியுள்ளது. இது வட அட்லாண்டிக் வழிக்கு இணையாக உள்ளது.

ஜப்பானிலிருந்து கச்சாப் பட்டும் தேயிலையும்; ஹாவாயிலிருந்து சர்க்கரையும் கிழக்கு நோக்கி அமெரிக்காவிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றன. திரும்பி வரும் பொருள்கள் முக்கியமாக மரமும், உற்பத்திப் பொருள்களும் ஆகும். அண்மைக் காலத்தில் உணவுப் பொருள்களும் வருகின்றன.

பசிபிக் வழிகள் நான்கு முக்கிய நிலைகளில் குவிகின்றன. மேற்கு அமெரிக்கா; பனாமா; சீனா, ஜப்பான், கிழக்கு நாடுகள்; ஆஸ்திரேலியா.

பசிபிக் வழிகளின் ஒரு சிறப்பியல்பாவது: ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிற்குக் கிழக்கே இருந்தும் வரும் பயணிகளின் விரைவுப் போக்குவரத்துக்குப் பனாமா–நியூசிலாந்து வழியைப் பயன்படுத்துவது ஆகும். தென் அட்லாண்டிக்கில் உள்ளதுபோல், தென் பசிபிக்கிலும் முக்கிய கிழக்கு-மேற்கு வழி இல்லை. ஆஸ்திரேலியாவும் தென் அமெரிக்காவும் மாற்றிக் கொள்ளும் பொருள்கள் மிகக் குறைவே காரணமாகும்.